திங்கள், 23 டிசம்பர், 2013

ஆம் ஆத்மி கேஜ்ரிவாலுக்கு மதுரையிலும் ஒரு பிறப்பு சான்றிதழ் ! முதல்வர் பொறுப்பேற்பது தள்ளிப்போகுமா?

ஆம் ஆத்மியின் கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.   இக்கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, பெரும்பான்மை வெற்றி கிடைக்காததால், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க விருக்கி றது. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் வரும் 26ம் தேதி ஜந்தர்மந்தரில் ஆட்சிப்பொறுப்பேற்கிறார்.இந்நிலையில், அவருக்கு தமிழ்நாட்டில் மதுரை மாநகரில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  டெல்லியில் வாழும் அரவிந்த் ஜெஜ்ரிவால் மதுரையில் பிறந்ததாக அம்மாநகராட்சியால் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஆளுக்கு இரண்டு இடத்தில் பிறப்பு சான்றிதழ் இருக்கிறது. ஆகவே, இதை தெளிவு படுத்தும் வரை அரவிந்த் ஜெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்க கூடாது என்று  வழக்கறிஞர்கள் முத்துக்குமார், ஸ்டாலின் மோகந்தாஸ் ஆகியோர், மதுரை கோர்ட்டில் வரும் புதன்கிழமை மனு தாக்கல் செய்யவிருக்கிறார்கள்.  இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பொறுப்பேற்பது தள்ளிப்போகுமா? என்று பரபரப்பாக பேசப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக