புதன், 25 டிசம்பர், 2013

நீரா ராடியா டெலிபோன் உரையாடல்; இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் எந்த ஒரு குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை சி.பி.ஐ.

அப்புறம் ஏனுங்க அவரோடு டெலிபோனில் பேசிய கனிமொழியை ஜெயில்ல போட்டீங்க ? அவர் ஒரு பச்சை தமிழச்சியாக இருப்பது தவிர வேறு என்னதான் காரணம் ?
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், நீரா ராடியா டெலிபோன் உரையாடல் தொடர்பாக 4 புதிய வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்தது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆலோசகர் நீரா ராடியா, அரசியல்வாதிகள், கார்ப்பரேட் நிறுவன அதிபர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோருடன் டெலிபோனில் பேசிய விவரங்கள், ரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்ற 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உரையாடல்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் பதிவு செய்துள்ளது. அந்த சி.டி.க்களை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு ஒரு கமிட்டியை அமைத்தது. அக்கமிட்டி, 23 உரையாடல்களில் முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்தது.
அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 14 உரையாடல்கள் பற்றி விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.
அதன்படி, வழக்குகளை பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது வரை நடத்தப்பட்ட 14 முதல்கட்ட விசாரணையில் எந்த ஒரு குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள விசாரணை நிலவரம் குறித்த அறிக்கையை குளிர்க்கால விடுமுறையை அடுத்து அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக