சனி, 21 டிசம்பர், 2013

பணத்தில் குளிக்கும் ‘பெரிய வீட்டு’ டீனேஜ் ஆண்களும் பெண்களும்! மற்றொரு உலகம்

பணத்தில் புரளும் பெரிய இடத்தில் மகனாகவோ, மகளாகவோ பிறந்திருக்கலாம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? (ஒருவேளை நீங்கள் அப்படி பிறந்திருந்தால், முதல் வாக்கியத்தை தவிர்த்து விடவும்) பெரிய இடத்து டீனேஜர்களின் வாழ்க்கை எப்படி போகிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வமா? Rich Kids of Instagram என்ற பெயரில்மாயா ஸ்லோவன் எழுதிய புத்தகம் ஒன்று அடுத்த ஆண்டு ஜூலையில் வெளியாகவுள்ளது. அதற்கான ப்ரமோஷன் வேலைகள் இப்போதே தடல்புடலாக நடக்கின்றன பொதுவாகவே எல்லோருக்கும் பக்கத்து வீட்டுக்குள் எட்டிப் பார்க்க ஆவல் இருப்பது இயல்புதான். பக்கத்து வீட்டில் பணமழை கொட்டுகிறது என்றால், அந்த ஆவலின் சதவீதம் பலமடங்கு எகிறுவதும் இயல்புதான். இதனால், இந்தப் புத்தகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகம். விலை $18.50 என விளம்பரப்படுத்தியுள்ளார்கள். இப்போதே ஆர்டர் பண்ணி முன்பதிவு செய்துகொள்ளவும் முடியுமாம்.
புத்தகம் யாரைப் பற்றியது என்பதற்கு ஒரு வரியில் கொடுத்துள்ள விளக்கம், ‘it follows the lives of teens who are ‘not your typical well-to-do brats’.
இந்த டீனேஜர்கள் பொதுவாகவே Ferrari கார்களில் சுற்றுபவர்கள். வார இறுதி நாட்களை கழிக்க பிரைவேட் ஜெட்களில் பறப்பவர்கள்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ‘பாருங்கள் நான் எப்படி வாழ்கிறேன’ என்று மற்றையவர்களுக்கு காட்டுவதில் ஆர்வம் உடையவர்கள். அதற்காக தங்களை போட்டோ எடுத்து ஆல்-லைனில் உலாவ விடுவதில் கில்லாடிகள்.
இந்த பணத்தில் புரளும் டீனேஜர்கள், போதைப் பொருள், செக்ஸ் என்று தமது வயதைவிட இருமடங்கு அதிகமானவர்கள் பெற்ற அனுபவங்களை விட அதிகம் பார்த்தவர்கள் என்றெல்லாம் சொல்லவேண்டியது அவசியமில்லை அல்லவா?
இப்படிப்பட்ட இளைஞர், யுவதிகள் பற்றி எழுதுவதற்கென்றே மேலை நாடுகளில் சில சஞ்சிகைகள் உள்ளன. இவர்களும், தம்மை பற்றி அவற்றில் வர வேண்டும் என்பதற்காக பணம் செலவு செய்ய தயாராக இருப்பார்கள். இவர்கள் ‘செலவு செய்வது’ என்றால், தொகை பற்றி சொல்ல வேண்டியது இல்லை அல்லவா?
சில சஞ்சிகை பப்ளிஷர்கள், அவற்றின் விற்பனை அல்லது விளம்பரங்களில் இருந்து கிடைக்கும் பணத்தைவிட, அதிக பணத்தை இந்த வகையில் பெற்றுவிடுவதும் நடக்கிறது.
இவர்கள் தமது வாழ்க்கை ஸ்டைலை போட்டோ எடுத்து விளம்பரம் செய்துகொள்வதில் ஆர்வம் உடையவர்கள் என்று எழுதினோம் அல்லவா? அதில் இவர்களுக்கிடையே பலத்த போட்டியே நடப்பதுண்டு.
ஒருவர் ஒரு பிரைவேட் ஜெட்டுக்கு முன்னால் நின்று போட்டோ எடுத்தால், மற்றையவர், அதைவிட விலை அதிகமான ஜெட் வேண்டும் என பிடிவாதம் பிடிப்பார். ஒருவர், 1000 டாலரைவிட அதிக விலையுள்ள ஷாம்பெயின் பாட்டிலுடன் போஸ் கொடுத்தால், மற்றையவர், அந்த ஷாம்பெயின் தயாரிக்கும் நிறுவனத்தில் ஸ்பெஷலாக ஆர்டர் செய்து, பெரிய சைஸ் பாட்டில் ஒன்றை தயாரிக்க வைத்து அதனுடன் போஸ் கொடுப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக