வியாழன், 26 டிசம்பர், 2013

பார்வதி ஓமனகுட்டன்: எதிர்பார்த்தளவுக்கு எனக்கு தென்னிந்திய படங்களில் வாய்ப்பு வரவில்லை

மும்பை:தமிழ் ரீமேக் ‘பீட்சாவாவது கைகொடுக்குமா என்ற கவலையில் இருக்கிறார் பார்வதி ஓமனகுட்டன்.அஜீத்துடன் ‘பில்லா 2‘ படத்தில் நடித்தவர் பார்வதி ஓமனகுட்டன். 2008ம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் 2வது இடம் பிடித்தவர். உயரம், அழகு எல்லாம் இருந்தாலும் பட வாய்ப்புகள் குவியாததால் கவலையில் இருக்கிறார். தமிழில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்த ‘பீட்சா‘ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. ‘ஷைத்தான்‘, விக்ரம் நடித்த டேவிட் படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்குகிறார். விஜய் சேதுபதி வேடத்தில் அக்ஷய் ஒபராய், ரம்யா நம்பீசன் வேடத்தில் பார்வதி நடிக்கின்றனர். இயக்குனர் கூறும்போது,‘படம்பற்றி எதையும் இப்போது வெளிப்படுத்த முடியாது. பார்வதி, அக்ஷய் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தமிழில் இப்படம் எப்படி உருவானதோ அதிலிருந்து கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டாலும் ரிலீஸ் தேதி பற்றி முடிவு செய்யவில்லை‘ என்றார்.


‘எதிர்பார்த்தளவுக்கு எனக்கு தென்னிந்திய படங்களில் வாய்ப்பு வரவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. எனவே எனக்கு அதிர்ஷ்டத்தை இந்தி படங்களில் சோதிக்க முடிவு செய்துவிட்டேன்‘ என்றார் பார்வதி ஓமனகுட்டன் .tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக