வெள்ளி, 13 டிசம்பர், 2013

நடிகை சோனாவிடம் ஒரு வெங்கட் பிரபு ஒரு கோடி! சோனா முறையீடு

நடிகை சோனா இயக்குநர் வெங்கட்பிரபு மீது புகார்< இயக்குநர் வெங்கட்பிரபு மீது நடிகர் சங்கத்தில் நடிகை சோனா புகார் அளித்துள்ளார். அப்புகாரில்,  ‘’வெங்கட்பிரபு ‘கோவா’ படத்தை டைரக்டு செய்த போது அவரை அணுகி எனக்கொரு படம் இயக்கித் தரும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் சம்மதித்தார். ‘கோவா’ படம் ரிலீசானதும் நான் தயாரிக்கும் படத்தை டைரக்டு செய்ய முடிவானது. இதற்காக அவருக்கு ரூ. 1½ கோடி பணம் கொடுத்தேன். ஆனால் உறுதி அளித்தபடி என் படத்தை அவர் டைரக்டு செய்யவில்லை. வேறு படம் எடுக்க போய் விட்டார். அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்ட போது தரவில்லை. பல வருடங்களாக பணத்தை கேட்டு வருகிறேன். இதுவரையிலும் அவர் தரவில்லை. வெங்கட் பிரபு தற்போது ‘பிரியாணி’ படத்தை இயக்கி உள்ளார். அந்த படம் ரிலீசுக்கு முன் எனக்கு தர வேண்டிய பணத்தை வாங்கி தரும்படி கேட்டுக் கொள்கிறேன்’’என்று குறிப்பிட்டுள்ளார். < இதுகுறித்து நடிகர் சங்கம் விசாரணை நடத்தியது. இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக