திங்கள், 2 டிசம்பர், 2013

பிரதீபா பாட்டீல் பரிசுப்பொருட்கள் ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைப்பு ! மகா...மகா

புதுடில்லி : 'முன்னாள் ஜனாதிபதி, பிரதீபா பாட்டீல், தன் பதவி காலத்தில் பரிசாக பெற்ற பொருட்களை, ஜனாதிபதி மாளிகைக்கு திருப்பிக் கொடுத்துள்ளார்' என, ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.மகாராஷ்டிராவை சேர்ந்த, காங்கிரஸ் மூத்த, பெண் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல், இப்போதைய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜிக்கு முன், 2007 - 2012 வரை அப்பதவியில் இருந்தார்.அப்போது, அவர், பல நாடுகளின் தலைவர்களிடம் இருந்து, பல பொருட்களை, மரியாதை நிமித்தமாக பரிசாக பெற்றிருந்தார். அவற்றை, தன் குடும்ப அறக்கட்டளைக்கு சொந்தமான, மகாராஷ்டிராவின், அமராவதி நகரில் உள்ள பள்ளியில், கண்காட்சியாக வைத்திருந்தார்.  அல்ப புத்திக்கு சிறந்த உதாரணமாய் திகழ்ந்தார். அவர் தானாக முன்வந்து திருப்பியளிக்க வில்லை சலசலப்பு அடங்கியதும் ஜனாதிபதி மாளிகை நிர்வாகம் அவைகளைப் பறித்தது
இதை அறிந்த, தகவல் ஆர்வலர், சுபாஷ் அகர்வால் என்பவர், ஜனாதிபதி மாளிகைக்கு கடிதம் எழுதி, பிரதீபா பெற்ற பரிசுப்பொருட்கள் பற்றிய நிலை குறித்து, கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்து, ஜனாதிபதி மாளிகை கூறியுள்ளதாவது தங்கப் பதக்கம்:
ஜனாதிபதி பதவி காலத்தில், பிரதீபா பெற்ற பரிசுப்பொருட்களில், பிரிட்டன் பிரதமரிடம் இருந்து பெற்ற, மெழுகுவர்த்தி ஸ்டாண்ட், தங்கப் பதக்கம், தென் ஆப்ரிக்க தலைவர், நெல்சல் மண்டேலாவிடம் இருந்து பெற்ற பரிசுப்பெட்டி உட்பட 155 பரிசுப்பொருட்கள், பிரதீபாவின் குடும்பத்திற்கு சொந்தமான பள்ளியில், சிறிது காலம் வைக்கப்பட்டிருந்தது.இதற்கான ஒப்பந்தம், அந்தப் பள்ளிக்கும், ஜனாதிபதி மாளிகைக்கும் இடையே, முன் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன் படி, கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்த பொருட்கள், திரும்பவும், ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைக்கப்பட்டு விட்டன.அது போல், அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது, அவர் பெற்ற பரிசுப் பொருட்களில், 36 பொருட்கள், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில், கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. அவை, மீண்டும், ஜனாதிபதி மாளிகைக்கு வந்து விட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக