சனி, 14 டிசம்பர், 2013

நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காங்கிரஸ் கடிதம் ! அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்கிறார் ?



நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 32 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும், சுயேட்சை உறுப்பினர்கள் 2 இடங்களையும் பிடித்தனர்.
70 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் 36 உறுப்பினர்களை கொண்ட கட்சி மட்டுமே குறைந்தபட்ச மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடியும். போட்டியிட்ட கட்சிகளில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதால் அங்கு ஆட்சி அமைப்பத்தில் இழுபறி நிலை நடந்து வருகின்றது.
அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி அடிப்படையில் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்கு வருமாறு பா.ஜனதா கட்சிக்கு டெல்லி கவர்னர் நஜீப் ஜங்க் அழைப்பு விடுத்திருந்தார். அதனையேற்று ஆளுனரை சந்தித்த பா.ஜனதாவின் முதல்வர் வேட்பாளரான ஹர்ஷ்வர்தன், தங்களுக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் பலம் இல்லாததால் ஆட்சியமைக்க இயலாது என கூறினார்.
இதை தொடர்ந்து டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 2வது பெரிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தவருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.ஆட்சி அமைக்கிறார் 


இதனையடுத்து, சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் டெல்லி கவர்னர் நஜீப் ஜங்கை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்க உள்ளார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி டெல்லி ஆட்சி பொறுப்பை ஏற்க பற்றாக்குறையாக உள்ள 8 எம்.பி.க்களின் ஆதரவை நிபந்தனை ஏதுமின்றி வழங்க தயாராக உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி கவர்னருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளர் ஷகீல் அகமது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தற்போது டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களின் பலம் 28 ஆக உள்ளது. பா.ஜ.க. ஆட்சி அமைக்க முன்வராத நிலையில் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் நிபந்தனையற்ற ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை அமைக்கக்கூடும் என்ற கருத்து டெல்லி அரசியல் வட்டாரத்தில் மேலோங்கி வருகிறது.
'நாங்கள் யாருக்கும் ஆதரவு அளிக்கவும் மாட்டோம். யாரிடமும் ஆதரவு கேட்கவும் மாட்டோம்' என்று கூறிவரும் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி வாசிகளின் தலையில் மேலும் ஒரு சட்டசபை தேர்தலை சுமத்தினால் மக்களின் கோபத்துக்கு உள்ளாக கூடடும்.
எனவே, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் அவர் ஆட்சி அமைப்பதே சிறந்தது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக