ஞாயிறு, 15 டிசம்பர், 2013

ஊழலில் திளைக்கும் இந்தியா ! இலங்கை சீனாவை விட அதிகம் !

ஊழல் புரிவது 'சாமர்த்தியம்''' என்றும்- ஊழல் சம்பாத்தியம் 'அந்தஸ்து' என்றும்- அங்கீகாரம் பெற்றுவிட்டது இங்கு... யாருக்கும் வெட்கமில்லை..." 
மனித சமுதாயத்தையே அரித்தெடுக்கும் புற்றுநோயாக ஊழல் பெருகி வருகிறது. இதைத் தடுத்து நிறுத்த ஒழிக்க, பலரும் பல வழிகளிலும் முயன்றும், இதுவரை எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
உலகம் முழுவதும் உள்ள 177 நாடுகளில் ஊழல் குறித்து ஆய்வு நடத்தியதில் ஊழல் இல்லாத நாடே இல்லை என தெரிய வந்துள்ளது. மூன்றில் இருபங்கு நாடுகளின் நிலை மிக மோசமாக உள்ளது. இருப்பினும் ஊழல் மிகக் குறைவாக உள்ள நாடுகளில் டென்மார்க், நியூசிலாந்து, பின்லாந்து, ஸ்வீடன், நார்வே, சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன. ஊழல் மிகுதியாக உள்ள நாடுகளில் சோமாலியா, வட கொரியா, ஆப்கானிஸ்தான், சூடான், லிபியா, ஈராக், சிரியா, ஏமன் போன்ற நாடுகள் முதல் இடத்தில் உள்ளன. இந்த பட்டியலில் இந்திய 91வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, சீனா இலங்கை போன்ற நாடுகளில் இந்தியாவை விட ஊழல் குறைவாக உள்ளது. பாகிஸ்தான், ரஷ்யா, வங்கதேசம் போன்ற நாடுகளில் இந்தியாவை விட ஊழல் அதிகமாக உள்ளது. சட்ட விரோத பண பரிமாற்றத்தை ஒழித்து, அரசியலில் புழங்கும் நிதி முறைகேடுகளைத் தூய்மைப்படுத்தி, மக்களிடமிருந்து திருடப்பட்ட பணத்தை மீட்டு, அரசுத் துறைகள் மிகவும் வெளிப்படையான முறையில் செயல்படச் செய்ய வேண்டியது மிக அவசியம்; அவசரமுமாகும். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக