செவ்வாய், 24 டிசம்பர், 2013

கம்போடிய கலைக்கோயில்கள்- (பாகம்-11) கம்­போ­டி­யா மன்­னர்­களின் பின்­ன­ணியில் தமி­ழகம்


இந்தியா இல்லாமல் அங்கோர் இல்லை ஆனால் அங்கோர் இந்திய நகரமன்று
இரண்­டா­யிரம்  ஆண்­டு­க­ளுக்கு  மேல் தமி­ழர்­க­ளுக்கு வர­லாறும், பண்­பாடும், இலக்­கி­யமும் இருந்த போதும்   Legendary Sites of The Ancient World என்ற   (பண்­டைய உலகின் பழங்­காலச் சின்­னங்கள்) புத்­த­கத்தில் பாகிஸ்­தானின் பஞ்சாப் மாநி­லத்தில்  உள்ள ஹரப்பா (Harappa)    மேற்கு பாகிஸ்­தா­னி­லுள்ள  மொஹர்­கரா (Mehrgrah)  இந்­தி­யாவில்   கங்கை நதி­யோ­ரத்தில்   உள்ள பாட­லி­புத்ரா (Pataliputhra) வடக்கு  பாகிஸ்­தானில் உள்ள டெக்­ஸிலா (Texila) ஆகி­ய­வற்றின் விப­ரங்கள் மட்­டுமே இந்­திய உப­கண்­டத்தில் இருந்து சேர்க்­கப்­பட்­டுள்­ளன.



ஆனால் தமிழ் நாட்டில் உள்ள ராஜ­ரா­ஜ­சோழன் கட்­டிய தஞ்ஞை பெருங்­கோயில், ராஜேந்­திர சோழன் கட்­டிய கங்கை கொண்ட சோழ­புரம், கி.பி. 3 ஆம் நூற்­றாண்டு முதல் தமி­ழ­கத்தில் ஆட்சி பல்­லவ மன்­னர்கள் கட்­டிய மாமல்­ல­புரம் என்­பன சேர்க்­கப்­ப­ட­வில்லை. நூலா­சி­ரி­யரின்   குறிப்பில் கிறிஸ்­து­வுக்கு முந்­திய காலத்து பழைமை சின்­னங்கள், அகழ்­வா­ராய்ச்சி இடங்கள் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டு­கிறார். ஆனால் தமி­ழ­கத்தில் இருக்கும் கிறிஸ்­து­வுக்கு முந்­திய அகழ்­வா­ராய்ச்சி இடங்கள் ஏனோ சேர்க்­கப்­ப­ட­வில்லை.
அதே நேரத்தில் கி. பி. 1113க்கு மேல் கட்­டப்­பட்ட அங்­கோர்வாட் கோயில் குறித்த தக­வல்கள் நூலில் இருக்­கின்­றன.
9ஆம் நூற்­றாண்டு தொடக்கம் 16 ஆம் நூற்­றாண்­டோடு நிறை­வுக்கு வந்த கெமர் மன்­னர்­களின் ஆட்­சியால் புத­ருக்குள் மறைந்து கிடந்த அங்­கோர்­வாட்டை வெளி உல­கிற்கு கொண்டு வந்­தவர் பிரெஞ்சு கிறிஸ்­தவ மிஷ­ன­ரி­ பாதர் செவ்ரூல் (1668 Chevereul) ஆவார்.
ஆனாலும் அது வெளி   உல­கிற்கு முழு­மை­யாக தெரிய   வந்­தது 1850இல். இன்­னொரு பிரெஞ்சு பாதி­ரியார் சார்ள்ஸ் எமிலி பொயூலிவக்ஸ் (Charles Emille Boullevaux) தஞ்ஞை பெருங்­கோயில்,என்­ப­வரால். இவர்கள் இரு­வரால் அங்கோர்வாட் மேலை உலகில் அறி­யப்­பட்டு தொல்­பொருள் ஆய்­வா­ளர்கள் கவ­னத்­திற்குப் போயி­ருக்­கி­றது. அதன் அடை­யா­ளமே அந்த நூல்.
அந்த நூலில் அங்­கோர்ட்வாட் இடம்­பெற்­றதில் எனக்கு மாற்றுக் கருத்­தில்லை. ஆனால் தமி­ழ­கத் தின் பழங்­கால கோயில்கள், சின்­னங்கள் ஏன் இடம்­பெ­ற­வில்லை என்­ப­துதான் என் கேள்வி. ஆனால் இந்தக் கேள்­விக்கு ஏதோ ஒரு வகையில் பதி­லாக அங்கோர் வாட் இருக்­கின்­றது. எப்­படி?
கம்­போ­டி­யாவில்  உரு­வான கெமர் மன்­னர்­களின் பின்­ன­ணியில் தமி­ழகம் இருந்­தி­ருக்­கி­றது. இது எனது யூக­மன்று. ஆய்­வா­ளர்­களின் கருத்து Angkor Splendors of The Khmer civilization என்ற புத்­த­கத்தில் அங் ­கோரை ஆண்ட மன்­னர்­களின் வர­லாறு தெளி­வாகத் தரப்­பட்­டுள்­ளது.
இந்தப் புத்­த­கத்தை Marilia Albanese என்ற இத்­தா­லியப் பெண்­மணி எழு­தி­யி­ருக்­கிறார். இவர் சமஸ்­கி­ருத மொழியில் பட்­டப்­ப­டிப்பும் இந்­தி­யிலும் இந்­தியப் பண்­பாட்டில் அடை­யாள பட்­டமும் பெற்­றவர். இத்­தா­லிய ஆபி­ரிக்க கல்வி நிறு­வ­னத்தின் இயக்­குநர். அவர் தனது நூலில் கம்­போ­டி­யாவின் கெமர் மன்­னர்கள் யார்? அவர்­களின் மூதா­தையர் எவர்? என்­பதை மறைக்­காமல் எழு­தி­யி­ருக்­கிறார்.
கம்­போ­டி­யாவில் இந்­தியா இல்­லாமல் அங்­கோர்வாட் கட்­டி­யி­ருக்க முடி­யாது. ஆனால் அங்­கோர்வாட் இந்­திய நக­ர­மன்று. அது புரா­தன பாரிஸை விட ரோமன் நகரை விட மேலா­னது. இப்­படி எழு­தி­யவர் ஒரு வெள்­ளைக்­கார ஆய்வாளர். கம்­போ­டி­யா­விற்கு இந்­தியத் தொடர்பு குடி­யேற்ற நோக்­கத்­தோடோ படை­யெ­டுப்­பாலோ ஏற்­ப­ட­வில்லை. இந்­திய வர்த்­த­கர்­களால் ஏற்­பட்­டது.
வியட்­நாமில் சீனர்கள் மக்கள் குடி­யேற்­றத்­தையும் கலா­சா­ரத்­தையும் திணித்­தது போல் இந்­தியா கம்­போ­டி­யாவில் எதையும் செய்­ய­வில்லை. ஆனால் சமஸ்­கி­ருதம் மூல­மாக கம்­போ­டி­யர்­களின் எழுத்து மொழிக்­கு வடி­வங்­களைக் கொடுத்­தது இந்­தி­யாதான்.
இந்­தியா என்றால் அன்று பல மன்­னர்­க­ளைக் ­கொண்ட நிலப்­ப­ரப்பு. அப்­ப­டி­யானால் எந்த மன்னர் வடநாட்டு மன்­னரா? தென் நாட்டு மன்­னரா ? சரி­யான விடை தென் நாட்டு மன்னர். அதுவும்  3ஆம் நூற்­றாண்டில் தமிழ் நாட்டில் ஆட்சி செய்த பல்­லவ மன்னன்  சேர, சோழ, பாண்­டிய  மன்­னர்­களை திறை­செ­லுத்த வைத்து தமி­ழகம் முழு­வ­தையும் ஆட்­சிக்குள் வைத்­த­தோடு வடநாட்­டையும் வென்று கப்பல் படை வைத்­தி­ருந்தான் அவர்கள் வழி­வந்த ஒரு இள­வ­ரசன். கடல் வழியே கம்­போ­டியா போயி­ருக்­கலாம். சீனர்­களின் வர­லாற்றுக் குறிப்­புக்­களும் அதைத் தான் சொல்­கின்­றன.
இதற்கு ஒரு கதை கெமர் வர­லாற்றில் உண்டு. கி. பி. 3ஆம் நூற்­றாண்டில் இந்­தி­யாவின் தென்­ப­கு­தியில் அப்­போது புகழ் பெற்ற ஒரு பேர­ரசின் இந்து இளைஞன் கடல் வழியே கம்­போ­டியா வந்­த­போது நாகாஸ் என்ற அர­சனின் மகள் அவனைப் பார்த்­ததும்  அவன் கம்­பீ­ரத்தில் மயங்கி சிறிய படகில் ஏறி அவ­னைச் ­சந்­திக்க முயன்றாள். ஆனால் இள­வ­ரசன் தன் மாய வில்லால் அம்­பெய்தி இள­வ­ர­சியின் படகைத் தாக்­கினான்.
அந்தத் தாக்­கு­தலால் கவ­ரப்­பட்ட இள­வ­ரசி அவனை மணக்க விரும்­பினாள். இத­னை­ய­றிந்த இள­வ­ர­சியின் தந்தை டிராகன் மன்னன் (Dragon King) இந்­திய இள­வ­ர­ச­னுக்கு மகளைத் திரு­மணம் செய்­வித்தான். பிறகு நீர் நிரம்­பி­யி­ருந்த பெரிய தரையின் நீரைக்­கு­டித்து வெறுந்­த­ரையைத் திரு­மணப் பரி­சாகக் கொடுத்தான்.
இந்­திய இள­வ­ர­சனின் பெயர் கெள­டின்யா (Kawdinya) அவன் மணந்த இள­வ­ர­சியின் பெயர் சோமா. (இன்றும் கம்­போ­டி­யாவில் சோமா என்ற பெயர் பெண்­க­ளுக்கு உண்டு.) அவர்­க­ளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் வளர்ந்து பெரி­யவன் ஆனதும்   தந்­தையின் துணை­யோடு பல்­ல­வர்­களின் அனு­ச­ர­ணை­யோடு புனன் (Funan மலை­ய­ரசன்) என்ற அரசை நிறுவி சந்­தி­ர­வம்சம் என்ற பெயரில் வைஷ்­ணவ வழி­பாட்டில் விஷ்ணு, கிருஷ்ணா ஆகிய தெய்­வங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தினான். 5ஆம் நூற்­றாண்டில் இந்­தி­யாவில் இருந்து வந்த இரண்­டா­வது கெள­டின்யா என்­பவன் புனன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்.
அப்சரப்பெண்களின் தோற்றமும் அவர் வழி வந்த கெமர் இனமும்
இரண்டாம் கெள­டின்யா காலம் முக்­கி­ய­மா­னது. சீன சரித்­தி­ரக்­ குறிப்­புக்­களின் படி சீன மன்னன் சம்­பா­ பே­ர­ரசை (King Of champa) எதிர்த்துப் போராட உதவி கேட்டு ஒரு குழுவை இவ­னிடம் அனுப்­பி­யி­ருக்­கிறான். இன்­னொரு தூதுக்­குழு நாக­சேன என்ற புத்த துறவி மூலம் புத்த மதத்தை பரப்ப வந்­தது. ஆனால் அவன் ஆட்­சியில் மகேஸ்­வரா (சிவா) வழி­பாடு மலையில் இருந்­தது. ஆகவே ‘மலை­களின் பிரபு’ என்ற பட்­டத்தைச் சூட்டிக் கொண்டான். பிறகு தன் பெய­ருக்குப் பின்னால் « வர்மன் » என்ற பெயர் வரும் வித­மாக கெள­டின்யா ஜெய­வர்மன் ஆனான். அவ­னோடு இந்தக் கெமர் மன்­னர்­களின் வர­லாறு வர்மன் என்ற பெய­ரோடு தொடங்­கி­யது.
கெள­டின்யா ஜெய­வர்­மனின் மகன் ருத்­ர­வர்மன். கி. பி. 514இல் ஆட்­சிக்கு வந்து சிற்ப வேலை­களைத் தொடங்கி வைத்தான். இதற்­கான சிற்­பி­களை தென்­னிந்­தி­யா­வி­லி­ருந்து கொண்டு வந்தான். அவர்­க­ளோடு பிரா­ம­ணர்­களும் வந்தார்கள். பிரா­ம­ணர்­க­ளோடு அரச குடும்­பத்­திற்கு தொடர்­புகள் உரு­வா­கின.
பிரா­ம­ணர்­களால் சமஸ்­கி­ருதம் அர­சாட்­சியில் முக்­கிய இடத்­தைப்­பெற்­றது. கடல் மூலம் ரோம் நக­ரோ­டான வர்த்­த­கமும் நடந்­தது. 539இல் ருத்­ர­வர்­மனின் மர­ணத்தைத் தொடர்ந்து புனன் அரசு வீழ்ந்து பல பிரி­வு­க­ளாக பிரிந்­தன. ஒரு பிரி­வுக்கு வீர­வர்­மனின் மகன் பஹா­வ­வர்மன் என்­பவன் இருந்­த­தா­கவும் அவன் நாட்டின் தலை­ந­க­ர­மாக பஹா­வ­புரம் இருந்­த­தா­கவும் சீனர்­களின் வர­லாற்றுக் குறிப்­புகள் தெரி­விக்­கின்­றன.
பஹா­வ­வர்­மனின் நாடு சென்லா (Chenla) என அப்­போது அழைக்­கப்­பட்­டது. அவ­னுக்குப் பிறகு சித்­ர­சேனன் ஆளும் உரிமை பெற்று தன் பெயரை மகேந்­திரவர்மன் என மாற்­றினான். அவ­னுக்குப் பிறகு இஷா­ன­வர்மன் ஆட்­சிக்கு வந்தான். இவன் ஆட்­சியில் தாய்­லாந்தின் சில பகு­தி­களும் லாவோஸ் நாட்டின் தென்­ப­கு­தியும் கம்­போ­டியா முழு­வதும் வந்­தன. வியட்­நாமை ஆண்டு கொண்­டி­ருந்த சம்பா (Champa) என்ற ஆட்­சி­யோடு நெருங்­கிய தொடர்பு கொண்டு தனது மகளை அந்­நாட்டு இள­வ­ர­ச­னுக்கு மண முடித்தான்.
628இல் இஷா­ன­வர்­மனின் மர­ணத்தை தொடர்ந்து மன்­னனைத் தெரிவு செய்­வதில் குழப்பம் உரு­வாகி பஹா­வ­வர்மன் – 11 ஆட்சி பொறுப்­பேற்றான். ஆனால் அவன் இஷா­ன­வர்­மனின் நேரடித் தொடர்பு இல்­லாத போதும் ஆட்­சிக்கு வந்ததால் குழப்பம் ஏற்பட்டு ஆட்சி பிளவுபட்டு சிறுத்தது.
654 இல் ஆட்சிக்கு வந்த முதலாம் ஜெயவர்மன் உலக வரலாற்றில் தொடர்ந்து 500 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த கெமர் பேரரசுக்கு அடிக்கல் நாட்டினான். இஷானவர்மனின் பேரனான இவன் கடந்த ஆட்சியில் பறிகொடுத்த நிலப்பகுதிகளைக் கைப்பற்றினான். அவன் மரணத் தைத் தொடர்ந்து ஆட்சி தடுமாறி பிளவுபட்டது.
ஆனாலும் சிறிய நிலப்பகுதியை அவன் மகள் ஜெயதேவி ஆட்சி செய்து கெமர் பேரரசின் முதலும் முடிவுமான அரசியானாள். இந்நி லையில் இரண்டாம் ஜெயவர்மன் 790இல் ஆட்சிக்கு வந்தான். ஆனால் இவனைப் பற்றி அக்கால அரபு வர்த்தகர்களால் எழுதி வைத்த குறிப்புக்கள் பிரமிப்பைக் கொடுத்தன.
(தொடரும்….)
மாத்தளை சோமு, அவுஸ்திரேலியா

ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக