புதன், 25 டிசம்பர், 2013

டாப் 15 லஞ்ச அதிகாரிகள் பட்டியல் 29ஆம் தேதி வெளியீடு! தமிழ் எழுச்சி இயக்கம்


டாப் 15 லஞ்ச அதிகாரிகள் பட்டியல் 29ஆம் தேதி வெளியீடு! ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல்!
தமிழகத்தில் உள்ள டாப் 15 லஞ்ச அதிகாரிகளின் பெயர் பட்டியல் வரும் 29ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என தமிழ் எழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் எழுச்சி இயக்கத்தின் மாநில செயலாளர் நந்தகுமார்,
ஊழல், லஞ்சத்துக்கு எதிராக செயல்படும் 20 அமைப்புகளை ஒருங்கிணைத்து ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் சார்பில் லஞ்சம் மற்றும் ஊழல் புகாரில் ஒரு அரசு ஊழியர் கைது செய்யப்படும்போது, புகார் செய்த நபருக்கு எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ரூபாய் 1 லட்சம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.


அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக இந்த பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக கலந்துரையாடல்கள் நடத்தி வருகின்றோம்.
ஈரோட்டில் வரும் 29ஆம் தேதி 'ஊழலை வேரறுப்போம், கையூட்டை கருவறுப்போம்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கில் தமிழகத்தில் உள்ள டாப் 15 லஞ்ச அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் டாப் 10 லஞ்ச அதிகாரிகளின் பட்டியல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நேர்மையாக பணியாற்றி வரும் முதல் 10 அதிகாரிகளின் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக