சனி, 16 நவம்பர், 2013

SMS மூலம் இரண்டே நிமிடங்களில் மணி ஆர்டர் பணம் பெறலாம்

சென்னை: தபால் நிலையங்களில் மணி ஆர்டர் அனுப்பினால், எஸ்.எம்.எஸ். மூலம் 2 நிமிடங்களில் பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தமிழகத்தில் அமலுக்கு வருகிறது. தபால் நிலையங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பினால், அந்த பணம் உரியருக்கு சென்றடைய சில நாட்கள் ஆகிவிடும் நிலை இருந்தது. இதனால் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்புவதை பொதுமக்கள் குறைத்துக் கொண்டனர். எஸ்.எம்.எஸ். மணியார்டர் அமல்! 2 நிமிடத்தில் பணம் பெறலாம்!! இந்நிலையில் இந்திய தபால்துறை, செல்போன் மணி ஆர்டர் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பணம் யார் பெயருக்கு அனுப்பப்படுகிறதோ, அவருக்கு தபால் நிலையத்தில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். பணம் பெறும் நபர், அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று, அந்த எஸ்.எம்.எஸ்.ஐ காட்டி பணத்தை பெற்று கொள்ளலாம். ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இந்த செல்போன் மணி ஆர்டர் மூலம் அனுப்பலாம் எனவும், இந்த எஸ்.எம்.எஸ். மணியாடர் முறை நவம்பர் 16 சனிக்கிழமை முதல்தமிழகத்தில் அமலுக்கு வருகிறது என இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக