வியாழன், 21 நவம்பர், 2013

SHE TAXI பெண்களால் நடத்தப்படும் டாக்சி கேரளாவில் அறிமுகம்

கேரள மாநில சமூக நீதி துறையின் கீழ், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புக்காக ‘ஜென்டர் பார்க்’ என்ற அமைப்பு சமீபத்தில் உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பின் முதல் நடவடிக்கையாக, பெண்களால், பெண் பயணிகளுக்காக நடத்தப்படும் டாக்சி சேவையான ‘ஷி டாக்சி’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.பெண் தொழில் அதிபர்களால் நடத்தப்படும் இந்த சேவையின் தொடக்க விழா நேற்று திருவனந்தபுரம் அருகே கனகக்குன்னு என்ற இடத்தில் நடந்தது. விழாவில் நடிகை மஞ்சுவாரியார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சேவையை தொடங்கி வைத்தார். அதன்படி 5 பெண் டிரைவர்களிடம், கார்களுக்கான சாவியை அவர் வழங்கினார்.நிகழ்ச்சியில் மாநில பஞ்சாயத்து மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் எம்.கே.முனீர், முரளீதரன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்சி சேவையை தொடங்கி வைத்ததும் தனது குடும்பத்துடன் அமைச்சர் எம்.கே.முனீர் டாக்சி ஒன்றில் பயணம் செய்தார். அதில் நடிகை மஞ்சுவாரியாரும் பயணம் மேற்கொண்டார்.24 மணி நேரமும் இயங்கும் இந்த டாக்சி சேவைக்கு சிறப்பு சேவை மையமும் (கால் சென்டர்) தொடங்கப்பட்டு உள்ளது. nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக