வியாழன், 7 நவம்பர், 2013

சுவேதா மேனன் காங்கிரஸ் MP மீது மீண்டும் : கீழ்த்தரமாக உரசிக்கொண்டே இருந்தார் !

காங்கிரஸ் எம்.பி., மேடையில் இடித்துக்கொண்டே இருந்தார்: நடிகையின் வாக்குமூலம் கோர்ட்டில் தாக்கல்
நடிகை சுவேதா மேனன் கடந்த வெள்ளிக்கிழமை, கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற பிரசிடண்ட் கோப்பை படகு பந்தய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சுவேதா மேனன் போலீசில் புகார் கொடுத்தார்.
கொச்சியில் உள்ள தனது வீட்டில் தன்னை சந்தித்த பெண் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவிடம் அவர் இந்த வாக்குமூலத்தை அளித்தார்.
இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது புகாரை வாபஸ் பெறுவதாக அவர் அறிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி. மன்னிப்பு கேட்டுக்கொண்டதால், இம்முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.
இருப்பினும், இதுபோன்ற வழக்குகளில் சட்டப்படி கோர்ட்டில் முதல் தகவல் அறிக்கையை போலீசார் தாக்கல் செய்வது வழக்கம். அதன்படி, கொல்லம் கோர்ட்டில் நேற்று முதல் தகவல் அறிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர்.
அதனுடன் சுவேதா மேனன் போலீசில் அளித்த வாக்குமூலமும் இடம்பெற்றுள்ளது. அதில், எம்.பி.யின் சில்மிஷம் குறித்து சுவேதா மேனன் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-
நான் விழா நடந்த இடத்துக்கு வந்தபோது, பீதாம்பர குருப் எம்.பி.யும், நீண்ட குர்தாவும், சால்வையும் அணிந்த ஒருவரும் என்னை வரவேற்றனர்.
நான் காரில் இருந்து இறங்கியவுடன், எம்.பி. என் கையைப் பிடித்துக்கொண்டார். விழா மேடையை அடையும் வரை, அவர் என் கையை விடவில்லை. இதனால், தர்மசங்கடம் அடைந்த நான், ‘நீங்கள் கையை விட்டால்தான், நான் மேடையில் பேசுவேன்’ என்று கூறிய பிறகுதான் அவர் கையை விட்டார்.
மேலும், நான் மேடையில் பேசும்போது, அருகில் வந்து என் தோள்பட்டையை தனது முழங்கையால் அறுவறுக்கத்தக்க வகையில் இடித்துக்கொண்டே இருந்தார். என்னை மீண்டும், மீண்டும் தொட்டார். இதனால் அவமானம் அடைந்த நான், பந்தயம் முழுவதையும் பார்க்க விரும்பாமல், உடனே கிளம்பி விட்டேன். இவ்வாறு சுவேதா மேனன் கூறியுள்ளார். nakheeran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக