வெள்ளி, 1 நவம்பர், 2013

கட்டவுட் பாலாபிஷேகத்துடன் அஜீத்தின் ஆரம்பம் மகா மகா வெற்றி போலத்தான் தெரிகிறது ! ம்ம்ம்ம்

அஜித்தின் ஆரம்பம் படம், மெகா ஓபினிங்குடன் ஆரம்பமாகியுள்ளது. படம்
வெளியாகும் முன்னரே வெளியான செய்திகள் பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருக்க, இன்று தமிழகம் முழுவதிலும் சுமார் 1,400 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆனது. சென்னையிலும் வேறு சில நகரங்களிலும், நேற்று நள்ளிரவில் இருந்தே ரசிகர்கள் கூட்டத்தை காணக்கூடியதாக இருந்தது.
இதனால், அதிகாலையிலேயே படம் திரையிடப்பட்டது. சென்னை எஸ்.எஸ்.பங்கஜம் தியேட்டரில் அதிகாலை 3 மணிக்கே முதல் காட்சி ஓடத் தொடங்கிவிட்டது.வேறு சில தியேட்டர்களில் அதிகாலை 4 மணி, 4.30 மணி என விடிவதற்கு முன்னரே காட்சிகள் தொடங்கின.

கூட்டத்தோடு கூட்டமாக சில சினிமா பிரபலங்களும் படம் பார்க்க வந்ததை காணக்கூடியதாக இருந்தது. சிம்பு, டாப்சி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, டைரக்டர் ராஜேஷ் உட்பட சிலர் தியேட்டர் பக்கம் தென்பட்டனர்.
இப்படி அட்டகாசமான ஓபினிங்குடன் தொடங்கிய சில படங்கள், எதிர்பார்த்த அளவில் படம் இல்லாத காரணத்தால் சில காட்சிகளிலேயே அழுதுவடிந்த சரித்திரமும் இங்கு உண்டு. ஆனால், அந்த பட்டியலில் ‘ஆரம்பம்’ கிடையாது.
படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்கள் பாசிட்டிவ் ரிப்போர்ட்டுகளாகவே கொடுத்துக் கொண்டிருக்க, வெளியே உற்சாகம் உச்சத்துக்கு சென்றது. முதல்நாள் காட்சிகளுடனேயே, இந்தப் படம் வசூல் ரீதியில் சூபபர் ஹிட் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக