வெள்ளி, 29 நவம்பர், 2013

இளம் பெண்ணுடன் நரேந்திர மோடி- புகைப்படங்கள் வெளியாகின!! .


அகமதாபாத்: குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவினால் வேவு பார்க்கப்பட்ட இளம்பெண்ணும் மாநில முதல்வர் நரேந்திர மோடியும் உரையாடிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை குலைல் இணையத்தளம் வெளியிட்டிருக்கிறது.
குஜராத் அமைச்சராக அமித்ஷா உத்தரவுப்படி பெங்களூரைச் இளம்பெண் ஒருவர் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டார். அவர் போகும் இடங்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டன. அவர் யார் யாருடனெல்லாம் பேசுகிறார் என்றெல்லாம் கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் அமித் ஷாவுக்கு தெரிவிக்கப்பட்டும் வந்தது. இந்த படத்தில் அப்படி என்னதான் இருக்கிறதுன்னு நமக்கு புரியல்ல   gulail.com 

அமித் ஷாவோ, தமது சாகிபுக்காகத்தான் இந்த உளவு வேலையை செய்து வந்ததாகவும் கூறப்பட்டது. இதற்கான ஆதாரங்களான அமித்ஷாவும் குஜராத் காவல்துறை அதிகாரி சிங்காலும் பேசுகிற தொலைபேசி உரையாடல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமித் ஷா குறிப்பிடும் சாகிபு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் என்றும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி குஜராத் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்நிலையில் 2005ம் ஆண்டு குஜராத்தின் கட்ச் பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் நரேந்திர மோடி, சர்ச்சைக்குரிய இளம்பெண் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் ஷர்மா மூவரும் உரையாடிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை குலைல் இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் கட்ச் பிரதேசத்தில் விழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த குடில்களில் மோடி இருந்த போது இந்த இளம்பெண்ணும் அங்கு இருந்ததாக பிரதீப் சர்மா தமது மனுவில் கூறியிருப்பதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக