செவ்வாய், 5 நவம்பர், 2013

மெட்ரோ ரயில் நாளை சோதனை ஓட்டம்.

சென்னையில் பெரும் பொருட் செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நாளை நடைபெறுகிறது. முதல்வர் ஜெயலலிதா இந்த சோதனை ஓட்டத்தை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். 2 வழித் தடங்களில் தற்போது அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தால் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ. 14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது
இரு வழித் தடங்களில், கிட்டத்தட்ட 45.1 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்தத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
23.1 கிலோமீட்டர் தொலைவிலான முதல் வழித்தடமானது வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்னை விமான நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ளது.23.1 கிலோமீட்டர் தொலைவிலான முதல் வழித்தடமானது வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்னை விமான நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ளது.
2வது திட்டத்தின் தொலைவு 22 கிலோமீட்டர் தூரமாகும். இது சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து பரங்கிமலை வரையிலானதாகும்
முதல் வழித்தடத்தில் சுரங்கப் பாதையில் 11 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை வண்ணாரப்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அமைக்கப்பட்டுள்ளது
சைதாப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை 6 ரயில் நிலையங்கள் பறக்கும் பாதையாக அமைக்கப்பட்டுள்ளது
2வது வழித்தடத்தில் 8 ரயில் நிலையங்கள் சுரங்கப் பாதையிலும், 8 நிலையங்கள் பறக்கும் பாதையிலும் அமைக்கப்பட்டுள்ளன
மெட்ரோ ரயில் பெட்டிகள் பிரேசிலிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. 4 பெட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. இதன் சோதனை ஓட்டம் நாளை நடைபெறுகிறது
800 மீட்டர் ரயில் பாதையில் நாளை நடைபெறும் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்
நாளை தொடங்கும் சோதனை ஓட்டம் தொடர்ந்து நடைபெறும். அதன் பின்னர் 2014ம் ஆண்டு பிற்பகுதியில் கோயம்பேடு முதல் பரங்கிமலை வரை ரயில் போக்குவரத்துத் தொடங்கும்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக