புதன், 6 நவம்பர், 2013

அரியானாவில் இறந்த குழந்தை உயிர் பிழைத்தது:

ஹிசார்:அரியானாவில், டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறிய, பச்சிளம் குழந்தை, புதைக்கும் நேரத்தில் சிணுங்கியதால், பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அரியானா மாநிலம், பால்சமந்த் கிராமத்தை சேர்ந்த விவசாயி, சத்பால். இவரது மனைவி, பூஜா, ஏழு நாட்களுக்கு முன், அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பிறந்தது முதல், ஆரோக்கியமாக இருந்த குழந்தைக்கு, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சற்று நேரத்தில், மூச்சுப் பேச்சற்று மயங்கியதால், குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மொதோ இவர்கள் போனது government ஆஸ்பத்திரியா என்று விசாரிங்க. பிரைவேட் என்றால் இறந்தே போயிருந்தாலும் நாலு நாளைக்கு வச்சி தான் அனுப்புவாங்க. அரசு ஆஸ்பத்திரி தான் உயிரோட இருக்குரவனையும் செத்துட்டான்னு மார்ச்சுவாரிக்கு அனுப்பி காரியமே பண்ணிருவாங்க.. ஆக மொத்தம் என் தேசத்தில் வாழ்வதே ஒரு சவால் தான்.
குழந்தையை, உடனடியாக, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, சிகிச்சை அளித்தனர்.குழந்தை பிறந்த போது, தாயின் வயிற்றில் இருந்த நீரை அதிக அளவில் குடித்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சில மணிநேர சிகிச்சைக்குப் பின், குழந்தை இறந்து விட்டதாகக் கூறினர். குழந்தையும், அசைவின்றி கிடந்தது. பேரதிர்ச்சிக்குள்ளான பெற்றோர், பெரும் சோகத்துடன் குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். நீண்ட நேரம் அழுது கொண்டிருந்த அவர்கள், ஏழு மணி நேரத்திற்குப் பின், உறவினர்களின் அறிவுறுத்தலால், குழந்தையை புதைக்க சம்மதித்தனர். அதன்படி, பூஜாவின் சேலையில் குழந்தையை கிடத்தி, வயலுக்கு எடுத்துச் சென்றனர். குழந்தையை புதைக்க குழியும் தோண்டினர். புதைக்கும் நேரத்தில், சேலையில் திடீரென அசைவு காணப்பட்டதால், அழுது கொண்டிருந்த பூஜா, குழந்தையை சேலையில் இருந்து எடுத்துப் பார்த்தார். அப்போது, டாக்டர்களால் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட குழந்தை, வாயில் விரல் வைத்து சிரித்துக் கொண்டே, அசைந்தது.மகிழ்ச்சி அடைந்த குழந்தையின் உறவினர்கள், உடனடியாக குழந்தையுடன் வீடு திரும்பினர். இச்சம்பவத்தால் கிராம மக்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். குழந்தையின் பெற்றோர், வீட்டில் சிறப்பு பூஜைகள் நடத்தி, குழந்தைக்கு, ராஜ்துலாரி எனப் பெயரிட்டுள்ளனர். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக