செவ்வாய், 19 நவம்பர், 2013

பாகிஸ்தானில் இந்திய நிகழ்சிகளை ஒளிபரப்பியதால் ஒரு கோடி ரூபா அபராதம் !



பாகிஸ்தானில் இந்தியா மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை பலமுறை ஒளிபரப்பிய 10 தொலைக்காட்சி சேனல்களுக்கு பாகிஸ்தான் அரசு ரூ. 1 கோடி அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தானில் 10 தொலைக்காட்சி சேனல்கள் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தலையும் மீறி இந்தியா மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை பலமுறை ஒளிபரப்பியுள்ளன. இதையடுத்து அந்தத் தொலைக்காட்சி சேனல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக