சனி, 16 நவம்பர், 2013

சிநேகா கர்ப்பம்... புதிய படங்கள் ஒப்புக் கொள்வதை நிறுத்தியுள்ளார்.

சென்னை: திருமணமான பின்னும் பரபரப்பாக படங்கள், விளம்பரங்கள், நகைக்கடை திறப்புகள் என ஓடிக் கொண்டிருந்த நடிகை சிநேகா, இப்போது கர்ப்பமாக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. விரும்புகிறேன் (படம் வெளியான கணக்குப்படி ஆனந்தம்) படம் மூலம் அறிமுகமான ;சிநேகா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பத்தாண்டுகளுக்கு மேல் தொடர்ந்தார். டந்த ஆண்டு நடிகர் பிரசன்னாவை அவர் காதலித்து திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பிறகும் அவர் நடிப்பைத் தொடர்ந்தார். ஹரிதாஸ் படம் அவர் திருமணத்தின்போது ஒப்புக் கொள்ளப்பட்டு, திருமணத்துக்குப் பின் வெளியாகு நல்ல பாராட்டுகளைப் பெற்றது.
இதுவரை தான் ஒப்புக் கொண்ட படங்களின் வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்கு போய் வந்த சிநேகா, கர்ப்பம் காரணமாக இப்போது வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

மனைவி கர்ப்பமடைந்திருப்பதையடுத்து, மகிழ்ச்சியுடன் வீட்டிலேயே இருந்து அவரைக் கவனித்துக் கொள்கிறாராம் பிரசன்னா. மனைவிக்குப் பிடித்த உணவுகளை வாங்கிக் கொடுத்து சந்தோஷப்படுத்தி வருகிறாராம்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக