வியாழன், 21 நவம்பர், 2013

ராகுல் கேள்வி: சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்?' விளங்கிடும்

போபால் : "மத்திய பிரதேச மாநில பா.ஜ., அரசு, சாலை வசதியை
ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறது. சாலை வசதியை ஏற்படுத்தினால் மட்டும், ஏழைகளுக்கு உணவு கிடைத்து விடுமா?'' என, காங்., துணை தலைவர் ராகுல், கேள்வி எழுப்பினார்.ம.பி., மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும், காங்., வேட்பாளர்களை ஆதரித்து, அந்த கட்சியின் துணை தலைவர் ராகுல், தார் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், நேற்று பேசியதாவது:மத்திய பிரதேசத்தில், 10 ஆண்டுகளாக, சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும், அந்த கட்சியினர், பெருமையுடன் கூறுகின்றனர். அதை நாங்கள் மறுக்கவில்லை. சாலைகளும், கட்டமைப்பு வசதிகளும், ஏற்படுத்தப்பட்டுள்ளது உண்மை தான். ஆனால், இங்கு, வறுமையில் வாடும், ஏழை மக்களுக்காக, என்ன செய்தீர்கள்?
.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
  அட, ஞான சூனியமே........நாட்டுக்கு சாலை வசதி என்பது மனித உடலில் இருக்கும் ரத்த நாளங்கள் போல என்று கூட தெரியலையே.....ரத்தம் உடல் முழுக்க சீராக செல்ல வேண்டாமா?...இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்.....
சாலைகளால், ஏழைகள், என்ன பயன் பெற முடியும்? சாலைகளையும், விமான நிலையங்களையும், பணக்காரர்கள் தான், பயன்படுத்த முடியும். சாலை வசதி ஏற்படுத்தினால் மட்டும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், உணவு கிடைத்து விடுமா? ஏழைகள் விஷயத்தில், காங்கிரஸ் கட்சி மட்டுமே, கவனம் செலுத்துகிறது. ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர, பாடுபட வேண்டும் என்பதே, காங்கிரஸ் கட்சியின் லட்சியம். இவ்வாறு, ராகுல் கூறினார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக