திங்கள், 4 நவம்பர், 2013

திமுக காங்கிரசுக்கு இடையே என்னதான் நடக்கிறது ?

டில்லியில் நடந்த, 15 கட்சிகளின் மூன்றாவது அணிக்கூட்டத்தில், அ.தி.மு.க., பங்கேற்றதால், காங்கிரஸ் பா.ஜ., கட்சிகளுடன், அ.தி.மு.க., கூட்டணி இல்லை என்பது உறுதியாகியுள்ளது. தி.மு.க.,வுடன் ஏற்பட்டுள்ள விரிசலை போக்கி, அக்கட்சியுடன் மீண்டும் கூட்டணியை புதுப்பித்துக் கொள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் நேற்று முன்தினம் திடீரென சந்தித்து பேசியுள்ளார். மேலும், இம்மாதம், 7ம் தேதி, கோவையில், காங்கிரஸ் பிரமுகர் இல்லத் திருமணத்தை தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைப்பதால், "தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மலருமா?'  ஊகத்தின் அடிப்படையில் மேலும் மேலும் எழுதிக் கொண்டே போகலாம்....

என்ற எதிர்பார்ப்பு இருகட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.சிவகங்கை மாவட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில், அ.தி.மு.க., அமைச்சர் தாமோதரனும் கலந்து கொண்டார். இதனால், "லோக்சபா தேர்தலை ஒட்டி, அ.தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உருவாகுமா?' என்ற கேள்வி எழுந்தது.ஆனால், காங்கிரஸ் பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைக்கப் போவதி"ல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், டில்லியில், 15 கட்சிகள் நடத்திய மூன்றாவது அணிக் கூட்டத்தில், அ.தி.மு.க., சார்பில் தம்பிதுரை எம்.பி., பங்கேற்றார்.

அ.தி.மு.க.,வில் கூட்டணிக்கான கதவு சாத்தப்பட்டுள்ளதால், மீண்டும் தி.மு.க.,வுடன் ஏற்பட்டுள்ள விரிசலை போக்கி, இணக்கமாகிக் கொள்ள, காங்கிரஸ் மேலிடம் விரும்ப இது ஒரு காரணமானது. அதேசமயம், சமீபகாலமாக, பா.ஜ., பக்கம் தி.மு.க., சாய்ந்து வருகிறது. ஏற்காடு சட்டசபை தேர்தலில் ஆதரவு கேட்டு, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். "மோடிக்கு, அமெரிக்கா விசா கிடைக்க வேண்டும்' என்பதிலும், அவருக்கு ஆதரவான கருத்தை கருணாநிதி தெரிவித்தார்.

முக்கியத்துவம் :இந்நிலையில், தி.மு.க., பா.ஜ., கூட்டணி உருவாகி விடக் கூடாது என்பதற்காகவும், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை புதுப்பித்துக் கொள்வதற்காகவும், காங்கிரஸ் தலைவர் சோனியா உத்தரவின்பேரில், மத்திய அமைச்சர் சிதம்பரம் நேற்று முன்தினம், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார்.ராஜ்யசபா தேர்தலுக்கு பின், கருணாநிதிக்கும், சிதம்பரத்திற்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்தது. சிதம்பரத்தின் தாயார் மறைவுக்கு, தி.மு.க., சார்பில் அஞ்சலி செலுத்த கட்சியினர் செல்லவில்லை. சிதம்பரம் மீது தி.மு.க., முன்னணி தலைவர்களும் அதிருப்தியுடன் இருந்தனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை கொண்டாடாத கருணாநிதியை தீபாவளி அன்று, சிதம்பரம் சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.இலங்கையில் நடைபெறவுள்ள, காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்றால், அதனால் ஏற்படும் சாதக, பாதகங்களை குறித்து, கருணாநிதியிடம் விளக்கினார். ஆனால், "காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க கூடாது' என, கருணாநிதி உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஒரே மேடையில், தி.மு.க., தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.அகில இந்திய காங்கிரஸ் செயலர் திருநாவுக்கரசரின் ஆதரவாளர் சொர்ணா சேதுராமன் மகள் திருமணம், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில், கோவையி"ல் இம்மாதம், 7ம் தேதி நடைபெறவுள்ளது. "காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என, மேடையில் அடிக்கடி ஸ்டாலின் பேசி வருகிறார். கருணாநிதி, சிதம்பரம் சந்திப்புக்கு பின், காங்கிரஸ் பிரமுகர் இல்லத் திருமண விழாவில், ஸ்டாலின் கலந்து கொள்வதால், "காங்கிரசுடன் கூட்டணி பழைய பாணியில் மலருமா?' என்ற எதிர்பார்ப்பு, இருகட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

நமது நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக