வியாழன், 21 நவம்பர், 2013

புது காதலனோடு சேர்ந்து கணவனை கூலிப்படை வைத்து கொன்ற காதல் மனைவி ! மதுரவாயல்


மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் 17–வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). போரூரில் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வித்யா (27). இவரும் அதே நிறுவனத்தில் பணியாற்றுகிறா வேலை செய்யும் இடத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது . பெற்றோர் சம்மதத்துடன் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். 6 வயதில் தீபிகா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பின் அஷ்டலட்சுமி நகரில் ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர்.
இன்றுகாலை ராஜ்குமார் கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
காலையில் எழுந்த அவரது மனைவி வித்யா இதை பார்த்து கதறி அழுதார். தனது கணவரை கொள்ளையர்கள் கொன்று விட்டு அவர் அணிந்து இருந்த நகைகளை கொள்ளை அடித்து சென்று விட்ட தாக கூச்சல் போட்டார்.
இதற்கிடையே ஆலப்பாக்கம் சோதனை சாவடியில் இன்று காலை 4 பேர் நன்றாக மது குடித்து விட்டு 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர். மதுரவாயல் சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜெபஸ்டின், ஏழுமலை ஆகியோர் மோட்டார் சைக்கிளை மடக்கினர். அவர்களின் சட்டை முழுக்க ரத்தக்கரை இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது ‘‘அஷ்டலட்சுமி நகரில் ராஜ்குமாரை கொலை செய்து விட்டு வந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். அவர்கள் கூலிப்படையை சேர்ந்தர்வர்கள் என்றும் ராஜ்குமாரை அவரது மனைவி வித்யாவே கொலை ஏற்பாடு செய்த திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது.
கொலையுண்ட ராஜ்குமாரின் சொந்த ஊர் காஞ்சீபுரம். மாமியார் வீட்டுக்கு கணவருடன் சென்ற போது வித்யாவுக்கு ஒரு பெண் தோழியாக கிடைத்தார். அவர் போரூரில் தனியாக குடியிருந்து வந்தார்.
வேலைக்கு செல்லும் போது வித்யா தோழி வீட்டுக்கு சென்று சந்தித்து வந்தார். தோழியின் ஒரே மகன் மணிகண்டன் (28) பெங்களூரில் ஒரு மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார். தாயை பார்க்க வரும் போது வித்யா அறிமுகமானார். அப்போது இருவருக்கும் காதல் அரும்பியது. இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.
இந்த விவகாரம் வித்யாவின் கணவர் ராஜ்குமாருக்கு தெரிய வந்தது, அவர் இருவரையும் கண்டித்தார். ஆனாலும் வித்யா மணிகண்டனுடன் உள்ள தொடர்பை விடவில்லை.
சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாருக்கு உடல் நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் 3 நாள் அனுமதிக்கப்பட்டார். அப்போது வித்யாவுடன் மணிகண்டன் தங்கி தேவையான உதவிகளை செய்து வந்தார். இது ராஜ்குமாருக்கு பிடிக்கவில்லை. மனைவியுடன் தகராறு செய்தார். கணவரின் தொல்லை பற்றி மணிகண்டனிடம் கூறி அழுதார்.
வித்யாவை ஆறுதல் படுத்திய மணிகண்டன் இந்த தொல்லைக்கு நிரந்தர தீர்வு ராஜ்குமாரை கொலை செய்வதுதான் என்று கூறினார். அதற்கு வித்யாவும் சம்மதித்தார்.
இதையடுத்து மணிகண்டன் செய்யாறைச் சேர்ந்த துரை என்பவரை அணுகினார். இவர் ஏற்கனவே பல கொலை வழக்கில் தொடர்புடையவர். ராஜ்குமாரை கொலை செய்ய அவருக்கு கூலி பேசப்பட்டது.
இதுபற்றி வில்லிவாக்கத்தில் குடியிருக்கும் கூட்டாளிகளுக்கு துரை தகவல் சொன்னார். உடனே கூலிப்படையைச் சேர்ந்த செந்தில், பெருமாள், ஸ்ரீதர், சரவணன் ஆகியோர் 2 மோட்டார் சைக்கிளில் நேற்று நள்ளிரவு ராஜ்குமார் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் வரும் தகவலை மணிகண்டன் வித்யாவுக்கு செல்போன் மூலம் மெசேஜ் அனுப்பினார். கூலிப்படை வீட்டுக்குள் நுழைவதற்கு வசதியாக வித்யா வீட்டுக் கதவை திறந்து வைத்து இருந்தார்.
கூலிப்படை வந்ததும் வித்யா கணவரின் காலை பிடித்துக் கொள்ள 4 பேரும் காய்கறி நறுக்கும் கத்தியால் ராஜ்குமார் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் 4 பேரும் அவர் அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். வித்யா படுக்கை அறையில் படுத்துக் கொண்டார்.
காலை எழுந்ததும் நகைக்காக கணவரை யாரோ கொலை செய்து விட்டார்கள் என்று கதை கட்ட வித்யா திட்டமிட்டார்.
உடனே போலீசார் இன்று ராஜ்குமார் வீட்டுக்கு சென்று பார்த்த போது. முன் அறையில் ராஜ்குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். வித்யாவை போலீசார் தேடிய போது அவர் படுக்கை அறையில் இருந்து அப்போதுதான் விழித்து வருவது போல் வந்தார். கணவரின் உடலை பார்த்து கதறி துடிப்பது போல் நாடகமாடினார்.
கொலையாளிகள் சிக்கியதை போலீசார் தெரிவித்ததும் வித்யா வாயடைத்து போனார். வித்யாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை தொடர்பாக வித்யாவின் கள்ளக்காதலன் மணிகண்டனை தேடி போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர். கூலிப்படை தலைவன் துரையையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
கணவனை கொன்று கொள்ளை நாடகமாட முயன்ற வித்யாவின் செயல் அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக