திங்கள், 25 நவம்பர், 2013

கை நிறைய சம்பளம், செழிப்பான வாழ்க்கை இருந்தும் பெண் டாக்டர் தற்கொலை ஏன்?

சென்னை: விஷ ஊசி போட்டு பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.வடபழனி ஆற்காடு சாலையை சேர்ந்தவர் ராஜராஜன் (45). டெல்லியில் உள்ள தனியார் சாக்லேட் நிறுவன விற்பனை பிரிவு மேலாளர். இவரது மனைவி டாக்டர் கீதா (41). இவர்களது ஒரே மகன் சித்தார்த் (14). வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை யில் கீதா பணிபுரிந்தார். சித்தார்த், கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறான்.குடும்ப தகராறு காரணமாக கடந்த வெள்ளி மாலை சித்தார்த்துக்கு விஷ ஊசி போட்டு விட்டு, தானும் விஷ ஊசி போட்டு கொண்டார் கீதா. மயங்கிய நிலையில் கிடந்த இருவரையும் விருகம்பாக்கம் போலீசார் மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு கீதா பரிதாபமாக இறந்தார். சித்தார்த் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கீதாவின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப் பட்டு அவரது உறவினரி டம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், டாக்டர் கீதா தற்கொலை செய்து கொண்டதற்கான பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:கீதாவுக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை. எம்.பி.பி.எஸ் முடித்த இவருக்கு, உறவினர் ராஜராஜனை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ராஜராஜன் மாதம் 1 லட்சம் சம்பாதிக்கிறார். கீதா மாதம் 60 ஆயிரம் சம்பளம் பெற்றுள்ளார். தவிர, தனியாக கிளினிக்கும் நடத்தி வந்தார். 2009 முதல் வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்துள்ளனர். ராஜராஜன் அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.சில மாதங்களாக இருவரும் விரக்தியில் இருந்துள்ளனர். வசதியான சூழலில் வாழ்ந்ததால் தன் பிரச்னைகளை யாரிடமும் சொல்லாமல் இருந்துள் ளார் கீதா. மன உளைச் சளால் மகனுக்கு விஷ ஊசி போட்டு தானும் போட்டுக் கொண்டுள்ளார். அதற்காக கிளினிக்கில் இருந்து ஆபரேஷன் செய்வதற்கு முன்பாக நோயாளிகளுக்கு செலுத்தும் மயக்க மருந்தை அதிகமாக வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார்.

 சம்பவத்தன்று மாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த மகன் சித்தார்த்தின் இடுப்பில் மயக்க ஊசியை போட்டார். அதன்பின், அளவுக்கு அதிகமான மருந்தை தனது இடது தோள்பட்டையில் ஊசி மூலம் ஏற்றியுள்ளார். பின்னர் சிறிது நேரம் மகன் முன்பு அமர்ந்து, கதறி அழுத கீதா மகன் படுத்திருந்த அதே படுக்கையில் மயங்கி விழுந்துள்ளார். குறைந்த அளவு மருந்து ஊசியில் செலுத்தப்பட்டதால் மகன் சித்தார்த் உயிர் பிழைத்துக் கொண்டான். இதற்கு முன்னதாக 3 முறை கீதா தற்கொலைக்கு முயன்றுள்ளார். 4வது முறை முயன்ற போதுதான் இறந்துள்ளார்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். படித்தவர்கள் அதிகம்தற்கொலை செய்வது ஏன்?

மன நல மருத்துவர்கள் கூறியதாவது:படித்தவர்கள் தற்போது அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்கள் வறுமையில் வாழ்பவர்கள் அல்ல. மாறாக மன விரக்தியில் இருப்பவர்கள். திருமணம் முடிந்த 3 மாதத்தில் தம்பதிகளுக்கு இடையே சிறிய கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு.ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும்போது, பிரச்னை முடிவுக்கு வந்து விடும். மாறாக தம்பதிகள் இருவரும் விடாப்பிடியாக இருந்தால் குடும்பம் கேள்விக்குறியாகி விடும்.

சிலர் விட்டுக் கொடுக்கின்றோம் என்ற பெயரில் மன அழுத்தத்திற்கு ஆட்படுகின்றனர். நம்பிக்கையானவர்களிடம் தங்களின் குறைகளை மனம் விட்டு பேசும்போது பிரச்னையில் இருந்து ஓரளவு விடுதலை கிடைக்கும். கஷ்டத்தை யாரிடமும் தெரிவிக்காமல் மூடி மூடி மறைப்பதின் மூலம் மனம் முழுவதும் பாதிக்கப்பட்டு எதிர்மறையான முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க நல்ல மன நல மருத்துவரை அணுகும்போது மனம் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்றனர் dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக