வெள்ளி, 8 நவம்பர், 2013

கனிமொழிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை ! சிபிஐ அதிகாரி ! சார் அவர் ஒரு சூத்திரர் என்ற ஆதாரம்தான் உள்ளதே ?

2ஜி அலைக்கற்றை வழக்கின் விசாரணை அதிகாரியும் சிபிஐ துணை கண்காணிப்பாளருமான எஸ்.கே. சின்ஹா தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை அளித்த வாக்குமூலம், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு சாதகமாக அமைந்தது.
இந்த வழக்கு விசாரணையை முன்னிட்டு, குற்றம்சாட்டப்பட்டுள்ள கரீம் மொரானி நீங்கலாக மற்ற அனைவரும் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜராயினர்.
ராம் ஜேத்மலானி குறுக்கு விசாரணை
இதையடுத்து, வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிஐ துணை கண்காணிப்பாளர் எஸ்.கே. சின்ஹாவிடம் கனிமொழி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி உள்ளிட்டோர் குறுக்கு விசாரணை நடத்தினர்.
அதற்கு எஸ்.கே. சின்ஹா அளித்த பதில்: "இந்த வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியான விவேக் பிரியதர்ஷியுடன் சேர்ந்து நான் ஒருதலைபட்சமாக குற்றப்பத்திரிகை தயாரித்ததாகக் கூறுவது தவறு.
கலைஞர் டிவிக்கு குசேகான் ஃபுரூட்ஸ் உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட நிதி, அவற்றின் பரிவர்த்தனைகள் மீது எனக்கு சந்தேகம் எழுந்தது. அவை தொடர்பாக நான் விசாரணை நடத்தினேன். கலைஞர் டிவி நிர்வாகிகள் ஜி. ராஜேந்திரன், அமிர்தம் ஆகியோரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தேன். அதான் திமுக ஆட்சி ஒரு திராவிடர் ஆட்சி என்ற வலுவான நோக்கம்  இருக்கிறதே ?

முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
கலைஞர் டி.வி அலுவலகத்தில் 2011-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி நடத்திய சோதனையின்போது, அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்ட விவரங்கள் அடங்கிய முக்கிய புத்தகத்தைப் பறிமுதல் செய்தேன். அதில் 2007-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி கலைஞர் டி.வி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டதாக இடம்பெற்றிருந்த ஆவணத்தை சரி பார்த்தேன்.
அப்புத்தகத்தில், 2007-ஆம் ஆண்டு ஜூன் 6,12,20 ஆகிய நாள்களில் நடைபெற்ற இயக்குநர்கள் குழு கூட்டத்தில் கனிமொழி பங்கேற்றதாகக் கூறப்பட்டிருந்தது.
2007-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து கலைஞர் டி.வி நிறுவன இயக்குநராக அவர் எக்கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என்பதை ஆவணங்கள் மூலம் அறிந்தேன்.
இந்நிலையில், இயக்குநர் பதவி வகிக்க கனிமொழிக்கு மத்திய உள்துறை ஒப்புதல் தெரிவிக்கவில்லை என்ற விவரத்தை கலைஞர் டிவி நிர்வாகி அமிர்தமிடம் 2011-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி விசாரணை நடத்தியபோது அறிந்தேன்.
உயரதிகாரி நெருக்குதல் இல்லை
இதை தலைமை விசாரணை அதிகாரியிடம் தெரிவித்தேன். அதன் உண்மை நிலவரத்தை ஆராயும்படி அவர் அறிவுறுத்தினார். கலைஞர் டி.விக்கு ரூ. 200 கோடி வழங்கப்பட்டதில் கனிமொழிக்கு உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் ஆதாரங்களை கண்டறியும்படி உள்நோக்கத்துடன் எனக்கு தலைமை அதிகாரி நெருக்குதல் கொடுத்தார் எனக் கூறுவது தவறு.
கனிமொழிக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்காததால் அமிர்தம் சிபிஐக்கு அளித்த வாக்குமூலத்தை திரித்துவிட்டதாகக் கூறுவதும் சரியல்ல.
2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற்ற கலைஞர் டிவி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் சரத் குமாரும் தயாளு அம்மாளும்தான் இருந்தனர். அக்கூட்டத்தில் கனிமொழி பங்கேற்கவில்லை' என்று எஸ்.கே. சின்ஹா சாட்சியம் அளித்தார்.
அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி அலைக்கற்றை வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியான விவேக் பிரியதர்ஷியிடம் வெள்ளிக்கிழமை குறுக்கு விசாரணை நடத்த குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்குரைஞர்களுக்கு அனுமதி அளித்தார்.
கனிமொழிக்கு சாதகம்
சின்ஹா பதிவு செய்த வாக்குமூலத்தில், 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற கலைஞர் டிவி இயக்குநர்கள் குழு கூட்டத்தில் கனிமொழி பங்கேற்கவில்லை என்று கூறியுள்ளார்.
அக்கூட்டத்தில்தான் சில தனியார் நிறுவனங்கள் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி பெறுவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்கூட்டத்தில் கனிமொழி பங்கேற்கவில்லை என்று சின்ஹா கூறியிருப்பது வழக்கில் கனிமொழிக்கு சாதகமான அம்சமாகக் கருதப்படுகிறது.
இந்த வழக்கில் கனிமொழிக்கு எதிராக குற்றம்சாட்டிய சிபிஐ, ரூ. 200 கோடி பெறுவதற்கு முடிவு எடுக்கப்பட்ட கூட்டத்தில் கனிமொழி பங்கேற்றார் என்று கூறியது. தற்போது அதை மாற்றி சிபிஐ அதிகாரி அளித்துள்ள சாட்சியம் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தயாளு அம்மாள் சாட்சியம் தாக்கல்
2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி கோபாலன் கடந்த மாதம் 28-ஆம் தேதி பதிவு செய்த சாட்சியம் தொடர்பான ஆவணங்கள் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
25 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணத்தில், 2ஜி அலைக்கற்றை வழக்கு என்றால் என்ன? நிறுவனத்தின் ஆண்டறிக்கை என்றால் என்ன உள்பட வழக்கு தொடர்புடைய பல்வேறு கேள்விகளுக்கு "தெரியாது' என்று தயாளு அம்மாள் பதில் அளித்துள்ளார். "காசாளர் அறிவுறுத்தியபடி அவர் குறிப்பிட்ட ஆவணங்களில் கையெழுத்துப் போட்டேன். எந்தக் கூட்டம் எதற்காக நடைபெற்றது போன்ற எந்த விவரமும் எனக்குத் தெரியாது' என்று தயாளு அம்மாள் கூறியுள்ளார்.
மேலும், தனது உடல்நிலை தற்போது சரியாக உள்ளது என்றும் தயாளு அம்மாள் அளித்த சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளா dinamani,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக