திங்கள், 11 நவம்பர், 2013

தமிழ் படங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வசூல் ! எல்லாம் புலன் பெயர்ந்த பாக்கியம் !

தமிழ் படங்களுக்கு சமீப காலமாக வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்திப் படங்கள்தான் இதுவரை வெளிநாடுகளில் வியாபாரம் ஆயின. அப்படங்கள் சர்வதேச அளவில் வசூலையும் வாரி குவித்தன. அதற்கு சவாலாக இப்போது தமிழ்படங்களும் வெளிநாடுகளில் அதிக விலைக்கு போய் நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. கமலின் விஸ்வரூபம், சூர்யாவின் ‘சிங்கம்–2’, விஜய்யின் ‘துப்பாக்கி’, ‘தலைவா’, அஜீத்தின் ‘ஆரம்பம்’ படங்கள் வெளிநாடுகளில் கணிசமான வசூலை ஈட்டின. அடுத்து விஜயின் ஜில்லா, அஜீத்தின் வீரம், ஆர்யாவின் ‘இரண்டாம் உலகம்’ படங்களும் நிறைய நாடுகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து ஆர்யா கூறும்போது,‘‘தமிழ் படங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. அஜீத்துடன் நடித்த ‘ஆரம்பம்’ மற்றும் ராஜாராணி படங்கள் வெளிநாடுகளில் நன்றாக ஓடுகிறது. இரண்டாம் உலகம் படத்துக்கும் சர்வதேச மார்க்கெட்டில் எதிர்பார்ப்பு உள்ளது என்றார். maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக