ஞாயிறு, 10 நவம்பர், 2013

Advani : மத்தியில் பா.ஜ.க.- காங்.,ஆதரவின்றி எந்த அரசும் அமையாது! மோடி பிரதமர் ஆக முடியாது என்பதை இவ்வளவு தெளிவாக யாரால் சொல்ல முடியும் ?

பிலாஸ்பூர்:மத்தியில் பா.ஜ.க.- காங்.,ஆதரவின்றி எந்த அரசும் அமைக்க முடியாது என பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் நாளை (11ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று சத்தீஸ்கர் சுகாதார துறை அமைச்சர் அமர் அகர்வாலை ஆதரித்து பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி பிலாஸ்பூர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அத்வானி பேசியதாவது:
டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களிலும் குஜராத்தை தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சியை அமைக்கும்.
பொருளாதார வல்லுனரான மன்மோகன் சிங்கின் தலைமையிலான ஆட்சி நடக்கும் நம் நாட்டில் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. நாடு இதுவரை சந்தித்திராத மோசமான ஆட்சியாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான இந்த ஆட்சி நடந்து வருகிறது.ஊழலும், விலைவாசி உயர்வும் விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்து விட்டன. வரும் பார்லிமென்ட் தேர்தலில் 3வது அணி உருவாவதற்கான வாய்ப்பே இல்லை.கடந்த 20-25 ஆண்டுகளாக நம் நாட்டின் அரசியலில் இணை துருவமாக பா.ஜ.க. வளர்ச்சி அடைந்துள்ளது.பா.ஜ.க. அல்லது காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் எந்த கட்சியாலும் மத்தியில் அடுத்த அரசை அமைக்க முடியாது. என்றார் அத்வானி. ம.பி.,சத்தீஸ்கரில் பா.ஜ.க., ஹாட்ரிக்:
>மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் குஜராத் மாநிலத்தில் நடந்தது போல 3வது முறையாக பா.ஜ.க., ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அத்வானி தெரிவித்தார். நான்கு மாநிலத்திலும் பா.ஜ., ஆட்சி:


குஜராத்தை போலவே டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களிலும் பா.ஜ., நன்றாக பணி செய்துள்ளது. இதனகாரணமாக நான்கு மாநிலங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பேசினார் அத்வானி. மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங் ஆகிய இருவரும் கடந்த 10 ஆண்டுகளில் மாநில வளர்ச்சி நோக்கிதான் பயணம் செய்துள்ளனர் எனவும் பேசினார் அத்வானி. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக