வியாழன், 7 நவம்பர், 2013

ஆசிரியை திட்டியதால் 7 மாணவிகள் தற்கொலை முயற்சி

தலைமை ஆசிரியை திட்டியதால் 7 மாணவிகள் தற்கொலை முயற்சி
மதுரை அருகே உள்ள கள்ளந்திரியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 7–ம் வகுப்பு படிப்பவர்கள் செல்வி (வயது 12), மெய்யம்மாள் (12), ஜெயந்தி (12), வினிதா (12), ஜெகதீஷ்வரி (12), சிவனேஸ்வரி (12), ஆழி (12). இவர்கள் இன்று காலை பள்ளிக்கு வந்த போது தலைமை ஆசிரியை ஏதோ ஒரு காரணத்திற்காக திட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மன வேதனை அடைந்த அவர்கள், சிறிது நேரம் பள்ளி வளாகத்திற்குள்ளேயே நின்றுள்ளனர். இந்த நிலையில் 7 மாணவிகளும் திடீரென மயங்கி விழ, பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன் சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மாணவிகளை பரிசோதித்தபோது விஷம் சாப்பிட்டது தெரிய வந்தது. வாழைப்பழத்தில், பேன் மருந்து கலந்து 7 மாணவிகளும் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.>இதனை தொடர்ந்து அந்த மாணவிகள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்திலேயே 7 மாணவிகள் விஷம் சாப்பிட்டு மயங்கி விழுந்த சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக