புதன், 13 நவம்பர், 2013

கோர்ட்டு பிடிவாரண்டு ! நடிகை அஞ்சலி சரண் அடைகிறார் ! மாதம் 50 ஆயிரம் ஜீவனாம்சம் கேட்கிறார் அவரின் சித்தி ! களஞ்சியம் பல லட்சங்கள் கேட்கிறார் ! வேறு யார் யாருக்கு எவ்வளவு வேணுமோ கேட்டுக்கோங்க

 நடிகை அஞ்சலி சென்னையில் உள்ள சித்தி வீட்டில் இருந்து வெளியேறி ஐதராபாத்தில் குடியேறியுள்ளார். சித்தியும், டைரக்டர் களஞ்சியமும் தன்னை கொடுமை படுத்தியதாக பரபரப்பு புகாரும் கூறினார். தமிழ் படங்களுக்கு முழுக்கு போட்டு விட்டு தெலுங்கு படங்களில் மட்டும் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் அஞ்சலி மீது டைரக்டர் களஞ்சியம் சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். போலீசிலும் புகார் அளித்தார். களஞ்சியம் இயக்கிய ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தில்தான் அஞ்சலி கடைசியாக நடித்து வந்தார். இந்த படத்தில் அஞ்சலி தொடர்ந்து நடிக்காததால் பாதியில் நிற்கிறது. களஞ்சியத்தின் அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அஞ்சலிக்கு கோர்ட்டு பல தடவை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் வரவில்லை. இதையடுத்து கடந்த 29–ந் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது நேரில் ஆஜராகாத அஞ்சலிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தர விட்டார். இதனால் அஞ்சலி அதிர்ச்சியாகியுள்ளார். பிடிவாரண்டு குறித்து வக்கீல்களுடன் அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. கோர்ட்டில் சரண் அடைந்து பிடிவாரண்டை ரத்து செய்யும்படி கோர அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் கோர்ட்டில் அவர் சரண் அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அஞ்சலி சித்தி பாரதிதேவியும் குடும்ப நல கோர்ட்டில் மாதம் தோறும் அஞ்சலி ரூ.50 ஆயிரம் ஜீவனாம்சமாக தர வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கும் விரைவில் விசாரணைக்கு வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக