ஞாயிறு, 24 நவம்பர், 2013

வேலூர்: 300 இஸ்லாமிய இளைஞர்கள் பாஜகவில் இணைந்தார்கள்

இந்துத்துவா கட்சி என வர்ணிக்கப்படும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை முன்னிறுத்தியுள்ளது அக்கட்சி தலைமை. ;குஜராத் கலவரத்தின் போது இஸ்லாமியர்களை கொத்து கொத்தாக கொல்ல உத்தரவிட்டவர் என்ற குற்றச்சாட்டு மோடி மீது உள்ளது. இஸ்லாமிய இயக்கங்கள் மோடியை விமர்சித்து வருகின்றன. இஸ்லா மிய இயக்கங்கள் மட்டுமல்ல அரசியல் கட்சிகளும் மோடி மீது குற்றம்சாட்டுகின்றன. இப்படிப்பட்ட நிலையில்,  இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் வேலூர் மாவட்டம், ஆம்பூரில் 300க்கும் மேற் பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் இன்று 23.11.13ந்தேதி நடந்த விழாவில் தங்களை பி.ஜே.பியில் இணைத்துக் கொண்டுள்ளனர். இது,  ஆம்பூர் இஸ்லாமிய மக்களை மட்டுமல்ல, மற்றவர்களை ஆச்சர்யத்தோடு பார்க்க வைத்துள்ளது. பரபரப்பாக பேசப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக