திங்கள், 18 நவம்பர், 2013

அரவிந்த் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு ரூ.2 கோடி! ஆம் ஆத்மியும் பரவாயில்லை ?

புதுடெல்லி: டெல்லியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு ரூ.2 கோடி என தெரிவித்துள்ளார்.டெல்லி உள்பட 5 மாநில தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள மொத்தம் 70 தொகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. டெல்லியில் முதல்வர் ஷீலா தீட்சித்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், ஊழல் எதிர்ப்பு செயல்பாட்டாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாஜ சார்பில் விஜேந்திர குப்தா ஆகியோர் போட்டியிடுகிறனர்.


அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த தேர்தல் மனுவில் சொத்து விவரங்களை வெளியிட்டிருந்தார். அதில், அவருடைய மற்றும் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் ஆகியோரின் சொத்து மதிப்பு ரூ. 2 கோடியே 10 லட்சத்து 48 ஆயிரத்து 389 என குறிப்பிட்டிருந்தார். டெல்லியில் உள்ள இந்திராபுரம் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத் ஆகிய 2 இடங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சொந்தமான பிளாட் ரூ.55 லட்சத்தில் உள்ளது.

அரியானாவில் உள்ள ஷிவானியில் ரூ.37 லட்சத்தில் பிளாட் உள்ளது. அவரது கையிருப்பாக ரூ.5 ஆயிரமும், அவரது மனைவி சுனிதாவிடம் கையிருப்பாக ரூ.10 ஆயிரம் மட்டும் உள்ளது. ரூ.9 லட்சத்தில் நகைகள் உள்பட அவரது வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 62 ஆயிரமும், அவரது மனைவியின் கணக்கில் ரூ.16 லட்சத்து 85 ஆயிரமும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவி சுனிதாவின் பெயரில் டெல்லியில் உள்ள குர்கானில் ரூ.1 கோடியில் வீடு உள்ளது. டெல்லி மாநில அரசுக்கு மின் கட்டணம் செலுத்தாத வகையில் ரூ.23 ஆயிரம் கடன் உள்ளது என்று அதில் தெரிவித்துள்ளார்.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக