வெள்ளி, 8 நவம்பர், 2013

டின்னர் செட் மட்டும் ரூ.1.5 கோடி... ம.பி. பாஜக தல

போபால்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜனதா தலைவர் யசோதரா ராஜே சிந்தியா தன்னிடம் ரூ.1.5 கோடி மதிப்பிலான டின்னர் செட் இருப்பதாக தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. குவாலியரின் முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த சிந்தியா தற்போது எம்.பி.யாக உள்ளார். ஆனால் இப்போது சிவபுரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள யசோதரா ராஜே சிந்தியா, வேட்பு மனுவுடன் தனது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்திருந்தார். அதில் இந்த விலை உயர்ந்த டின்னர் செட் தன்னிடம் இருப்பதை குறிப்பிட்டுள்ளார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக