வியாழன், 7 நவம்பர், 2013

அசராம் பாபு சுவாமிஜி மீது 1,000 பக்க குற்றபத்திரிகை ! மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றன ?

ஜோத்பூர்: சிறுமியை பாலில் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் அசராம் பாபுக்கு எதிராக 1,011 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர்.மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் அசராம் பாபு, மத்திய பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. சிறுமிக்கு பேய் பிடித்திருப்பதாகவும் அதற்கு பரிகார பூஜை செய்வதாகவும் கூறி  ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் சிறுமியை அசராம் பாபு பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன் பேரில், இந்தூரில் உள்ள ஆசிரமத்தில் அசராம் பாபுவை ராஜஸ்தான் போலீசார் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி கைது செய்து ஜோத்பூர் சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் அசராம் பாபுக்கு எதிராக ஜோத்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் போலீசார் நேற்று 1,011 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது. இதில் சிறுமியை ஜோத்பூர் ஆசிரமத்தில் அசராம் பாபு அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டுள்ளது. பின்னர், 16ம் தேதி வரை குற்றம் சாட்டப்பட்டவர்களின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அன்று குற்றச்சாட்டுக்கள் மீது வாதம் தொடங்குகிறது. தன் மீது பொய்யான குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் அசராம் பாபு கூறினார். dinakaran,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக