திங்கள், 28 அக்டோபர், 2013

அம்மா உணவகத்திற்கு Traffic ராமசாமி வழக்கு ! அம்மா குடிநீருக்கும் வழக்கு !

சென்னை: ‘அம்மா' உணவகம் பெயரை மாற்றக்கோரியும்... குடிநீர் பாட்டிலில் இரட்டை இலை சின்னத்தை நீக்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 10 மாநராட்சிகளில் அம்மா உணவகம் என்ற பெயரில் மலிவு விலை கேண்டீன் செயல்பட்டு வருகிறது. இதேபோல் மலிவு விலையில் குடிநீரும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் அம்மா உணவகம் பெயரை முதலமைச்சர் உணவகம் என்று மாற்றக் கோரியும், தமிழக அரசு வழங்கிவரும் அம்மா குடிநீர் பாட்டிலில் இருக்கக்கூடிய இரட்டை இலை சின்னத்தை நீக்கக் கோரியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்தார். மக்கள் வரிப்பணத்தில் தொடங்கப்படும் திட்டங்களில் முதலமைச்சர் படங்களும் , கட்சி சார்ந்த சின்னங்களும் இடம் பெறுவது சட்டவிரோதமான செயல் என்று அவர் தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி 2004 ஆம் ஆண்டு ஆயிரம் லிட்டர் குடிநீரை 5 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், தற்போது 1 லிட்டர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், 4 வார காலத்திற்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக