வெள்ளி, 25 அக்டோபர், 2013

நடிகை சரிதாவின் Ex கணவர் முகேஷ் பிரபல நடன ஆசிரியை தேவிகாவை திருமணம் செய்தார்

நடிகை சரிதாவை விவாகரத்து செய்து பிரிந்த நடிகர் முகேஷ் 2–ம் திருமணம்
செய்து கொண்டார். முகேஷ் மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ளார். தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கு 53 வயது ஆகிறது. முகேஷுக்கும், நடிகை சரிதாவுக்கும் 1989–ல் திருமணம் நடந்தது. சந்தோஷமாக குடும்பம் நடத்திய இவர்களுக்குள் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் தனித்தனியாக பிரிந்தனர். பின்னர் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார்கள். 2007–ல் விவாகரத்து கிடைத்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள். அதன் பிறகு முகேஷுக்கும் கேரளாவில் பிரபல நடன ஆசிரியையாக உள்ள தேவிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. தேவிகா மோகினியாட்டம், கதக்களி, குச்சிபுடி நடனத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.
நடனத்தில் டாக்டர் பட்டம் பெற தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஆராய்ச்சி கட்டுரையும் சமர்பித்து உள்ளார்.

கேரளாவில் உள்ள கல்லூரிகளிலும் நடன ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். முகேஷ்– தேவிகா திருமணம் கேரளாவில் நடந்தது. ரிஜிஸ்டர் அலுவலகத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்கள். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக