வியாழன், 10 அக்டோபர், 2013

தூத்துக்குடி கல்லூரி முதல்வரை மாணவர்களே வெட்டிக்கொன்றனர் ! College principal hacked to death by students near Tuticorin

தூத்துக்குடி: தனியார் பொறியியல் கல்லூரி முதல்வரை மாணவர்களே வெட்டிக்கொன்ற கொடூரம்
    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள இன்பேன்ட் ஜீசஸ் என்ஜினீயரிங் என்ற தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் இன்று (10.10.2013) காலை படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் தனியார் பேருந்தில் பயணம் செய்தபோது கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்திய கல்லூரி முதல்வர் சுரேஷ், ஏரோநாட்டிக்கல் பிரிவில் கடைசி ஆண்டு படிக்கும் பிச்சைக்கண்ணன் என்பவரை கடந்த திங்கள்கிழமை சஸ்பெண்ட் செய்தார். நாசிரேத் பகுதியைச் சேர்ந்த அந்த மாணவர் கல்லூரி முதல்வர் எடுத்த நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து கல்லூரி விடுதி தோழர்களான நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த பிரபாகரன், சிவகங்கையைச் சேர்ந்த டேனிஸ் ஆகியோருடன் இன்று காலை பிச்சைக்கண்ணன் கல்லூரி வளாகத்திற்கு வந்தார். அப்போது காலை 8.20 மணி அளவில் காரில் வந்த சுரேஷை மூன்று மாணவர்களும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


இதையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து இரு கல்லூரிகளுக்கும் ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வல்லநாடு பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் nakkheeran.i

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக