செவ்வாய், 29 அக்டோபர், 2013

C காசு P பணம் M மணி ! CPM விளையாடு மங்காத்தா ! அரசியல்தான் எங்காத்தா இனிஎல்லாம் பணம்தான் !

சி.பி.எம் கார்ட்டூன் சி.பி.எம்.க்கு கொள்கை ஒன்றுதான். அதாவது, “காண்ட்ராக்ட் எடுப்பது, கமிசன் அடிப்பது போன்றவை தவறல்ல. அதனை ஊரறிய உளறிக்கொட்டுவதுதான் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல்!”கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் என்று சொல்லிக் கொண்டு பணத்தாசைப் பிடித்து அலைபவர்கள்
ங்காத்தாவில் வருகின்ற அஜித் போல சி.பி.எம்.மின் சமர் ஆச்சார்ஜி இருக்கிறார். காம்ரேடுகள் கார்ப்பரேட்டுகளாக காட்சியளிக்கின்றனர். சி.பி.எம்மின் மத்திய கமிட்டி, கார்ப்பரேட் ஆபீசு போலவும் பழங்கால மன்னர்களின் அந்தப்புரம் போலவும் சீரழிந்துபோயுள்ளது. போலி கம்யூனிஸ்டுகளான சி.பி.எம்., சி.பி.எம். தலைமையை அம்பலப்படுத்தி, சீரழிந்த அவர்களது நடைமுறைகளைக் கேள்விக்குள்ளாக்கி, அவர்களது சீரழிவுக்கான காரணங்களையும் விளக்கி பு.ஜ.தொ.மு., வி.வி.மு.வினர் வெளியிட்டுள்ள பிரசுரத்தின் உள்ளடக்கம்: சி.பி.எம். கட்சியை கம்யூனிஸ்ட் கட்சி என்று கருதுபவர்களின் சிந்தனைக்கு…
ம்யூனிசத்தை நேசிக்கும் தோழர்களே, நண்பர்களே!
சமர் ஆச்சாரி
சமர் ஆச்சார்ஜி
இதோ, இந்தப் படத்தில் நீங்கள் பார்ப்பவர், பணத்தினால் பஞ்சணை செய்து அதில் படுத்துப் புரண்டு கொண்டு, தன் மீது பணக் கட்டுகளைப் போட்டு மகிழ்ந்து உற்சாகமாக இருக்கிறார். இந்த வக்கிரபுத்திக் காரார் யார் தெரியுமா? திரிபுரா மாநில சி.பி.எம் கட்சியின் ஜோகேந்தர் நகர் கமிட்டி உறுப்பினர் சமர் ஆச்சார்ஜி. 42 வயதாகும் இவர், தான் வசிக்கும் அகர்தலா மாநகராட்சியில் கழிப்பிட காண்ட்ராக்ட் எடுத்ததில் 2.5 கோடி ரூபாய் கமிசனடித்துள்ளார். இந்தப் பணத்தில் 20 லட்ச ரூபாயை வங்கிலியிருந்து எடுத்து படுக்கை தயாரித்து பணத்திலேயே புரண்டு மகிழ்ந்துள்ளார்.
இதுமட்டுமல்ல, தான் பணத்தில் புரளும் இந்த காட்சியை விடியோ படமாக எடுத்து நண்பர்களுக்குக் கொடுத்துள்ளார். இது பின்னர் தொலைக்காட்சிகளிலும் வெளி வந்தது. அதில், “எனது கட்சியின் பிற தலைவர்களைப் போல பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவன் என்று கூறிக்கொண்டு, சம்பாதித்த சொத்துக்களை மறைத்து ஏழையைப் போல நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை” என்ற உண்மையைப் போட்டுடைத்துள்ளார். பாம்பின் கால் பாம்பு அறியும் என்பார்களே, அது இதுதான் போலும்!
சி.பி.எம். கட்சியோ அவரை கட்சியின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டதாகக் கூறி கட்சியைவிட்டு நீக்கியிருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆச்சர்ஜிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று காட்ட முயற்சிக்கிறது.
சி.பி.எம் கார்ட்டூன்ஆச்சார்ஜிக்கும் சி.பி.எம்.க்கும் கொள்கை ஒன்றுதான். அதாவது, “காண்ட்ராக்ட் எடுப்பது, கமிசன் அடிப்பது போன்றவை தவறல்ல. அதனை ஊரறிய உளறிக்கொட்டுவதுதான் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல்!”
கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் என்று சொல்லிக் கொண்டு பணத்தாசைப் பிடித்து அலைபவர்கள், திரிபுராவிலும் சி.பி.எம். செல்வாக்காக இருக்கும் மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களிலும் சி.பி.எம். கட்சிக்குள் நடக்கும் சண்டைகளும் கோஷ்டி மோதல்களுமே இதற்கு சாட்சி. கட்சி முழுவதும் பணத்தாசை பிடித்தவர்களும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் என்று வட்டம், மாவட்டம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. ஃபைனான்சியர்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் கம்யூனிச விரோதிகளாக செயல்படுகின்றனர். இவர்கள் பொதுமக்களது சொத்தைக் கொள்ளையடிப்பதும் அன்றாட நிகழ்வு. இதற்கு சில உதாரணங்களை இங்கே தருகிறோம்.
  • எட்டு மணிநேர வேலைமுறையை மாற்றி 10 மணிநேரமாக உயர்த்தக் கோரிய கோவையைச் சேர்ந்த கோவிந்தசாமி என்ற முதலாளியைக் கட்சியில் வைத்து வளர்த்துவிட்டது சி.பி.எம்.தான்!
  • சென்னையில் உ.ரா.வரதராசன் மீது பாலியல் குற்றங்களுக்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருந்த போது, “கட்சியில் மத்தியக் கமிட்டி, மாநிலக் கமிட்டிகளில் தன்னைப் போல் பலர் இருக்க, தன்மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கிறீர்கள்” என்று உ.ரா.வரதராசன் கடிதத்தில் கேட்டிருந்தது பின்னர் அம்பலமானது.
  • கேரளத்தில் சி.பி.எம்.மின் இடுக்கி மாவட்ட செயலர் மணி, தனது அரசியல் எதிரிகளை கொன்றோம் என்று பகிரங்கமாக மேடையிலேயே அறிவித்தார். டி.பி.சந்திரசேகரன் என்ற ஆர்.சி.பி.யின் தலைவரை கொன்றதில் கேரளாவின் அச்சுதானந்தன் உள்ளிட்ட முன்னணி தலைவர்களுக்கு தொடர்பு இருப்பது வெளிவந்துள்ளது. விஜயன், அச்சுதானந்தன் கும்பலுக்குள் காண்ட்ராக்ட், கோஷ்டி சண்டைகள் ஊர் நாறி போயுள்ள விவகாரம். இதில் பிரகாஷ் கரத் இரண்டு சமூக விரோதிகளையும் கட்டப்பஞ்சாயத்து செய்து, கம்யூனிசக் கொள்கையை குழிதோண்டி புதைத்துள்ளார்.
  • நமது பகுதியில், தளி எம்.எல்.ஏ. போன்ற தாதாக்களை வளர்த்துவிட்டதே சி.பி.எம்.தான்! ஏ.பி.எல். ஆலைத் தொழிலாளர் களின் சங்கப் பணத்தை திருடிய தேவராஜ் என்பவரை, சி.ஐ.டி.யூ. சங்கம் சங்கத்தைவிட்டு வெளியேற்றிய போதும், சி.பி.எம். கட்சியில் அவரு க்கு பொறுப்பு கொடுத்து உள்ளூர் பேட்டை தாதாவாக வளர்த்ததும் சி.பி.எம்.தான்!
  • சி.பி.எம். கட்சியில் மாவட்டத் தலைவர்கள் பலரும் தங்களது குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் பல ஆயிரங்கள் செலவு செய்து படிக்க வைப்பதும், சி.பி.ஐ., சி.பி.எம் என இரு கட்சிகளின் மாவட்ட குழு உறுப்பினர்கள் பலர் பலகோடி சொத்து சேர்த்து வைத்திருப்பதும் கட்சிக்கு தெரிந்துதான் நடக்கிறது.
ஒருகாலத்தில் ஒசூர் தொழிற்பேட்டையில் கொடி கட்டி பறந்த சி.ஐ.டி.யூ., அத்தலைமையின் தொழிலாளர் விரோத, துரோக நடவடிக்கையால் இன்று செல்வாக்கிழந்து, செயலிழந்து இருக்கிறது.
கார்ப்பரேட் முதலாளிகளிடம் பணம் வாங்குவதில்லை என்று சி.பி.எம். கட்சி சொல்கிறது. ஆனால், மேலிருந்து கீழ்வரை கார்ப்பரேட் முதலாளிகளிடம் காசு வாங்கிதான் கட்சியை நடத்துகின்றனர். இப்படி சேர்த்த கட்சியின் ஆண்டு வருமானம் மட்டும் ரூ.76.57 கோடி  (2012ம் ஆண்டு). 2007–2011 ஆகிய ஐந்தாண்டுகளின் இதன் வருமானம் ரூ.417.26 கோடி ரூபாய்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் போல இந்தப் பணத்தில் ஒரு தொகையை பங்குச் சந்தையில் போட்டு பெருக்க முயற்சித்த போது, அந்த பணம் திவாலானதால் சி.பி.எம். கார்ப்பரேட் ஊழல் அம்பலமானது. கமிசன் அடிப்பது, காண்ட்ராக்ட் பார்ப்பது, சமூகவிரோத செயல்புரிவது, இதில் வருகின்ற ஒரு தொகையை கட்சிக்கு வாங்கிக்கொள்வது என்ற அதன் நடைமுறை சீரழிந்த காங்கிரசு, பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. பாணியிலானது. முக்கியமாக, நந்திகிராம் மற்றும் சிங்கூரில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் டாடா, பிர்லா, அம்பானிக்கும் அடியாள் படையாக செயல்பட்டு உழைக்கும் மக்களை ஒடுக்கியது சி.பி.எம்.தான்.
இன்றைக்கும் மக்களுக்கு உண்மையுடனும் சமூக அநீதிகளுக்கு எதிராக நேர்மையாக போராடுகின்ற ஒருசில தோழர்கள் சி.பி.ஐ., சி.பி.எம் கட்சிகளில் இருக்கின்றனர். ஆனால், பலரும் கட்சியின் உள்ள ஊழல், ஆடம்பர வாழ்க்கை, சமூகவிரோத செயல்கள், சீரழிவு போன்றவற்றைப் பார்த்து, வெந்து, நொந்து போய் கட்சியைவிட்டு ஒதுங்கி இருக்கின்றனர்.
சி.பி.எம்., சி.பி.ஐ. தொடங்கப்பட்ட காலத்தில் நேர்மையாகவும் தியாக பூர்வமாகவும் வாழ்ந்த பலர், பிற்காலத்தில் மேற்கண்ட வகையில் வக்கிர புத்திகாரர்களாகவும் துரோகிகளாகவும் ஏன் மாறிப் போனார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. தேர்தல் பாதையின் மூலம் புரட்சியை நடத்துவது என்ற கட்சியின் நிலைப்பாட்டில் தான் இந்த முக்கியமான பிரச்சனை அடங்கியுள்ளது. ஓட்டுக்காக கூட்டணி விட்டு கூட்டணி தாவுவது என்ற அதன் கொள்கையும் நடைமுறையும்தான் முக்கியக் காரணம். தேர்தல் பாதை திருடர் பாதை என்பதற்கு சி.பி.எம்., சி.பி.ஐ. போன்றவை சீரழிந்து நிற்பதே சிறந்த முன்னுதாரணங்கள்!
உதட்டளவில் கம்யூனிஸ்டு என்று சொல்லிக்கொண்டு, நடைமுறையில் ஓட்டுக்கட்சிகளை விடக் கேவலமாக மக்களை சுரண்டுவதும் ஒடுக்குவதும்தான் சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளின் செயல்பாடாக உள்ளது. இதனால்தான் இவர்களை போலி கம்யூனிஸ்டுகள் என்று சொல்கிறோம்.
ஆகையால், கம்யூனிசத்தை உண்மையாக நேசிக்கின்ற சக்திகள் போலி கம்யூனிஸ்டுகளை இனியும் கம்யூனிஸ்டுகள் என்று நம்பலாமா? இன்று பெருகி வரும் சமூக நெருக்கடிகளை தீர்க்கவும், தியாகபூர்வமாக உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்பினர் போராடி வருகின்றனர். எந்த ஒரு பிரச்சனையிலும் முன் கையெடுத்து செயல்படுகின்றனர். மக்களையும் விடுதலையையும் கம்யூனிசத்தையும் நேசிக்கின்ற நீங்கள், இந்த புரட்சிகர அமைப்புகளில் உங்களை இணைத்துக் கொள்வதுதான், மக்களுக்கும் சமூக விடுதலைக்கும் நீங்கள் செலுத்தும் சரியான பங்களிப்பாகும்!
[நோட்டீசை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்] vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக