ஞாயிறு, 20 அக்டோபர், 2013

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்கா தலையிட நவாஸ் ஷெரிப் கோரிக்கை

1999-ம் ஆண்டு கார்கில் போர் நடந்த போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப் அமெரிக்கா சென்றார். அப்போது காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்கா முயலவேண்டும் என்று அதிபர் பில் கிளிண்டனிடம் கேட்டுக்கொண்டார். மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்சினைகளில் செலவளிக்கும் நேரங்களில் 10 சதவிகித நேரத்தை அமெரிக்க அதிபர் செலவிட்டால் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அப்போது அவர் கூறினார். இந்நிலையில், நேற்று பிரதமர் நவாஸ் ஷெரிப் மூன்று நாள் பயணமாக அமெரிக்க சென்றார். அமெரிக்கா செல்லும் வழியில் லண்டனின் இறங்கிய அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நவாஸ் கூறியதாவது:-


காஷ்மீர் பிரச்சினைக்கு இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று வாஷிங்டன் தொடர்ந்து கூறி வருகிறது. இருந்தும், இவ்விசயத்தில் அமெரிக்காவின் தலையீட்டை பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அணுகுண்டுகளை வைத்திருக்கிறது. கடந்த 60 வருடங்களாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஆயுதங்களை இப்பகுதியில் குவித்து வருகிறது.  இந்தியா, காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வரவில்லையானால், உலக நாடுகள் முன்வர வேண்டும்.

நிலைமை மிகவும் அபாயகரமாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியா அணுகுண்டு வைத்திருக்கிறது. நாங்களும் வைத்திருக்கிறோம். இந்தியா ஏவுகணைகளை அதிகம் உற்பத்தி செய்து வருகிறது. நாங்களும் உற்பத்தி செய்து வருகிறோம். இதற்கு ஒரு கட்டுப்பாடு வரவேண்டும். இதுகுறித்து நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  malaimurasu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக