வியாழன், 10 அக்டோபர், 2013

மாதத்தில் ஒருநாள் மௌன உணவகம் ! நியு யோர்க்கில் வித்தியாசமான ரெஸ்டாரன்ட்

;நியுயார்க் : அமெரிக்காவின் நியுயார்க் புறநகர் பகுதியான புரூக்ளீனின்
க்ரீன்பாயின்ட் பகுதியில் ‘ஈட்’ என்ற பெயரில் உணவகம் ஒன்று செயல்படுகிறது. இந்த உணவகத்தில் வித்தியாசமான நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. அதாவது மாதத்துக்கு ஒரு நாள் இந்த உணவகத்தில், ‘அமைதி நாள்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சாப்பிடும்போது வாடிக்கையாளர்கள் யாருமே பேசக்கூடாது. முழுவதும் மவுனம் காக்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். இங்கு இயற்கையான உரங்கள் மூலம் விளைந்த பொருட்களை மட்டும் உபயோகித்து சமைக்கிறார்கள். இந்த உணவகத்தின் மேலாளர் நிக் நியுமன் என்பவரின் யோசனையில் உதித்த ஐடியாதான் இது. இதுபற்றி அவர் கூறியதாவது: இந்தியாவில் உள்ள புத்த மத துறவிகளுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, அவர்களுடன் இருந்தபோது புத்த துறவிகளின் சமையல் முறைகள், உணவு உண்ணும் முறை, உணவுக்கும் மனதுக்குமிடையே உள்ள உறவு குறித்த அவர்களது பழக்க வழக்கங்கள் எனக்கு புதுமையாகவும் பிடித்தும் இருந்தது.


இந்த பழக்க வழக்கம், உணவின் மீது மனிதனுக்கு உள்ள அக்கறை, உணவு எப்படி உடலையும் மனதையும் பாதிக்கிறது என்று புரிந்துகொள்ள உதவியது. அதை முன்மாதிரியாக கொண்டு எங்கள் உணவகத்தில் மாதாந்திர நிகழ்ச்சியாக ஒரு நாள், ‘அமைதி நாளை’ பின்பற்றுகிறோம். இந்த நாளின்போது, வாடிக்கையாளர் கள் பேசாமல் சாப்பிடவேண்டும் என்பதே விதி. அப்படி பேசுபவர்களை வெளியே புல்வெளியில் வைக்கப்பட்டுள்ள டேபிளுக்கு மாற்றிவிடுவோம். ஆனால், இதுவரையில் இந்த தண்டனையை யாருமே பெற்றதில்லை. இவ்வாறு அவர் நிக் நியுமென் கூறினார். dinakaran,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக