புதன், 16 அக்டோபர், 2013

பெரம்பலூரில் குடிகார மகனை குத்தி கொன்றார் தந்தை

பெரம்பூர்:வேலைக்குபோகாமல் ஊர் சுற்றித்திரிந்த மகனை சரமாரியாக கத்தியால் குத்தி தந்தை கொலை செய்துள்ளார். பெரம்பூரில் நேற்றிரவு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையை சேர்ந்தவர் நடராஜ் (63). செக்யூரிட்டி வேலைபார்த்து வருகிறார். மனைவி கஸ்தூரி (58). தம்பதிக்கு மகன், 2 மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. மகன்   யோகேஸ்வரன் (43) பெற்றோருடன் வசித்து வந்தார். நகை பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி விமலா (37). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். யோகேஸ்வரன் சரியாக வேலைக்கு போகாமல் மது குடித்து விட்டு ஊர்சுற்றி வந்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் விமலா கணவரை பிரிந்து கேகே நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு போய்விட்டார்.


இந்த நிலையில் யோகேஸ்வரன் தந்தைக்கு தெரியாமல் அம்மாவிடம் அடிக்கடி பணம் வாங்கி மது குடித்து வந்தார். நேற்றிரவு 10.45 மணியளவில் யோகேஸ்வரன் போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது நடராஜ் மகனை தட்டி கேட்டுள்ளார். இதில் இவருக்கும் வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது.  இதில் ஆத்திரம் அடைந்த நடராஜ் சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து  மகன் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் யோகேஸ்வரன் துடிதுடித்து சம்பவ இடத்தில் இறந்தார்.

தகவல் அறிந்தும் திருவிக நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து யோகேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நடராஜை கைது செய்து விசாரிக்கிறார்கள். தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அப்பா கொலை செய்த சம்பவம் பெரம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. - tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக