சனி, 19 அக்டோபர், 2013

நஸ்ரியாவை துரத்திய கோடம்பாக்க மாபியா !

என் தொப்புளுக்கு டூப் போட்டுட்டார் என இயக்குநர், தயாரிப்பாளர், போலீஸ் மற்றும் பிரஸ் என எல்லோரையும் பாடாய்ப் படுத்தி, பின்னர் பொசுக்கென்று பின்வாங்கிக் கொண்ட நடிகை நஸ்ரியாவுக்கு இப்போது டாட்டா காட்டிவிட்டது கோடம்பாக்கம்! கிட்டத்தட்ட 5 புதிய படங்களில் ஒப்பந்தமானதாக சொல்லப்பட் நஸ்ரியாவின் கையில் இப்போது இருப்பது திருமணம் எனும் நிக்கா என்ற ஒரே படம்தான்.  இரண்டு புதிய படங்களிலிருந்து அவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. போதாக்குறைக்கு, ஷுட்டிங்கில் தான் அணியும் உடையைக் கூட செல்போனில் படமெடுத்து காதலனிடம் காட்டி ஒப்புதல் பெறும் ஒரு பெண்ணை நடிக்க அழைத்துக் கொண்டு போய் எப்படி படப்பிடிப்பை நடத்துவது என்ற யோசனைதான் இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளருக்கும். தமிழ் சினிமாவில் தன் நிலை என்னவென்பதை புரிந்து கொண்ட நஸ்ரியாவும், இனி நம்ம சொந்த ஊரிலேயே குப்பை கொட்டிக் கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது. கடந்த மூன்று நாட்களில் மூன்று புதிய மலையாளப் படங்களில் ஒப்பந்தமாகிவிட்டாராம். அதில் மம்முட்டி மகன் நடிக்கும் படமும் ஒன்று!
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக