வெள்ளி, 11 அக்டோபர், 2013

சவுதியில் வாகனம் ஓட்ட பெண்களுக்கு தடை! நெட்டில் வீடியோ வெளியிட்டு போராட்டம்.

ரியாத்: இஸ்லாமிய நாடான
சவுதியில் முஸ்லிம் பெண்கள் வெளியே போகும்
போது முகம் தலையை மறைத்தபடி பர்தா அணிந்து செல்லவேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடு உள்ளது. பைக், கார் ஓட்டக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் ஒழுக்கத்தை மீறிய செயலாகி விடும். பெண்கள் ஆண்களுடன் ஒரே வாகனத்தில் அருகருகே உட்கார்ந்து செல்வார்கள் என்றும் இதற்கு தடை விதித்தது சரி என்றும் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் பெண்கள் பாதுகாப்பு அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது. இந்த நிலையில் ரியாத்தில் பெண் ஒருவர் பைக் ஓட்டிச்செல்லும் காட்சி,
பைக்கிற்கு பின்னால் ஆண் ஒருவர் உட்கார்ந்திருப்பது, பெண் கார் ஓட்டுவது, காரில் டிரைவர் ஷீட்டில் இருந்து பெண் இறங்கி செல்வது போன்ற படங்கள், வீடியோ காட்சிகளை சமூக தளத்தில் சவுதி பெண்கள் அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் வெளியிட்டுள்ளனர். பெண்கள் வாகனம் ஓட்ட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சவுதியில் சர்ச்சை எழுந்துள்ளது. tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக