புதன், 30 அக்டோபர், 2013

மகாராஷ்ட்ராவில் பில்லி சூனிய மந்திரவாதிகளுக்கு எதிராக போராடிய தபோல்கரின் மரண விசாரணை அதோ கதியானது !

மகாராஷ்டிராவின், புனே நகரில், பில்லி சூனிய பேர்வழிகளுக்கு எதிராகவும், மோசடி மந்திரவாதிகளுக்கு எதிராகவும், பல
ஆண்டுகளாக போராடி வந்த,
நரேந்திர தபோல்கர், கடந்த ஆகஸ்ட் மாதம், மர்ம நபர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.அவரை சுட்டுக் கொன்ற கொலைகாரர்கள் பயணம் செய்த இருசக்கர வாகனம், சென்ற வழி எல்லாம், போலீசுக்கு தெரிகிறது; ஆனால், கொலைகாரர்கள் மட்டும், இன்னும் பிடிபடவில்லை.எம்.பி.பி.எஸ்., படித்து, நோயாளிகளின் நோயை போக்கும் முயற்சியில் சக டாக்டர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், நரேந்திர தபோல்கர், சமூகத்தை பிடித்திருந்த, நோயை போக்க முயற்சித்தார். அதனால், அவரின் சக டாக்டர் நண்பர்கள், கோடிகளைக் குவித்த நிலையில், இந்த உலகை விட்டே போய்விட்டார் நரேந்திர தபோல்கர்.மகாராஷ்டிர அந்தராஷ்ரதா நிர்மூலன் சமதி என்ற பெயரில், ஒரு அமைப்பையே நிறுவி, மூட நம்பிக்கைகளுக்கும், பில்லி, சூனியத்திற்கும் எதிராக போராடிவந்த, நரேந்திரா மறைந்து விட்டார்.அவர் விட்டுச் சென்ற பணியை, அவரின் வாரிசுகள், ஹமித் மற்றும் முக்தா தொடர்கின்றனர்.


சடங்குகள் இல்லாமல்...:வீடு கட்டுபவர்கள், நல்ல நாளில் வேலைகளைத் துவங்குவர். வீட்டின் அறைகளை, வாஸ்து சாஸ்திரப்படி அமைப்பர். வீட்டுக்கு வெளியே, திருஷ்டி பூசணிக்காயை போட்டு உடைப்பர்.நரேந்திர தபோல்கரும் வீடு கட்டினார்.எவ்வித சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கும் இடம் கொடுக்காமல், வாஸ்து பற்றி கவலைப்படாமல், தன் இஷ்டத்திற்கு வீட்டைக் கட்டினார். திருஷ்டி பூசணிக்காய் கிடையாது; புதுமனை புகுவிழா கிடையாது.எளிமையாக வாழ்ந்து காட்டியவர். எளிமையான முறையில் திருமணம் செய்த அவர், தன் இரு வாரிசுகளுக்கும், மிக எளிமையாக, எவ்விதச் சடங்குகளும் இல்லாமல் திருமணம் நடத்தியவர்.- நமது சிறப்பு நிருபர் -dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக