புதன், 23 அக்டோபர், 2013

வருகிறார் வைகை புயல் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் !

காமெடிப் புயல் வடிவேலு மீண்டும் அசத்தலாக தமிழ் சினிமாவில் தன் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கிறார். ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தில் அவரது நகைச்சுவை கெட்டப் படங்களை முதல் முறையாக பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ளார் பிஆர்ஓ. அந்தப் படங்களில் வடிவேலுவின் முகபாவங்களைப் பார்க்கும்போதே நம் உதடுகள் சிரிப்பில் தானாக விரிகின்றன.
புதுப் பொலிவுடன்..
‘ந்தா வந்துட்டாருய்யா நம்ம வைகை காமெடிப் புயல்…’ என்று சொல்ல வைக்கும் அளவுக்கு புதுப் பொலிவுடன் காட்சி தருகிறார் வடிவேலு.

மீனாட்சி தீக்ஷித்
படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் மீனாட்சி தீக்ஷித். இந்த வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் பார்வதி ஓமணக்குட்டன். ஆனால் அவரை நடிக்கவிடாமல் யாரோ சதி செய்துவிட்டதாக வடிவேலுவே கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
3 ஆண்டுகளுக்குப் பிறகு…
விஜய்யுடன் நடித்த காவலன் படத்துக்குப் பிறகு வேறு புதிய படங்களில் நடிக்கவில்லை. அதற்குப் பிறகு வெளியான மம்பட்டியான், மறுபடியும் ஒரு காதல் போன்றவை அவர் ரொம்ப நாளைக்கு முன்பு ஒப்புக் கொண்டு நடித்தவை. எனவே கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இடைவெளிவிட்டு இந்தப் படத்தில் நடிக்கிறார் வடிவேலு.
யுவராஜ்
போட்டா போட்டி என்ற படத்தை இயக்கிய யுவராஜ் இந்த தெனாலிராமன் படத்தை இயக்குகிறார். கல்பாத்தி அகோரம் பிரமாண்ட முறையில் தயாரிக்கிறார்.

புதிய ஸ்டில்கள்
இந்தப் படத்தில் வடிவேலு கெட்டப் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு காமெடி ரசிகர்களுக்கு நிறையவே இருந்தது. இந்த நிலையில் வடிவேலுவின் புதிய ஸ்டில்களை நேற்று மீடியாக்களுக்கு அனுப்பினர்.
பார்த்தவுடன் சிரிப்பு
வடிவேலுவின் இந்த புதிய ஸ்டில்களைப் பார்த்த உடனே சிரிப்பு வந்துவிடும் அளவுக்கு இயல்பாக இருந்தன. இதோ நான் வந்திட்டேன் என்ற தொணியில் அவர் தந்திருக்கும் போஸ்கள், வடிவேலு என்ற நல்ல காமெடியனை இத்தனை நாள் இழந்துவிட்டோமே என்ற எண்ணத்தை அனைவர் மனதிலும் ஏற்படுத்துவது நிச்சயம்!
Jaggajala Pujabala Tenaliraman Movie Stills

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக