வியாழன், 24 அக்டோபர், 2013

மலையாள நடிகர் நடிகைகள் மீது இசையமைப்பாளர் மகன் பாய்ச்சல்

திருவனந்தபுரம்: முதுபெரும் இசைஅமைப்பாளர் கே.ராகவன் இறுதிசடங்கில் மலையாள நடிகர்கள்,
இயக்குனர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்ததை
இசை அமைப்பாளர் மகன் கண்டித்துள்ளார்.மலையாளத்தில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்தவர் கே.ராகவன் (99). கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்தார். அவரது மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த மலையாள நடிகர்கள் ஒருவர்கூட வரவில்லை. இதை அவரது மகன் கண்டித்துள்ளார். இது பற்றி ராகவனின் மகன் முரளிதரன் கூறியது: என் தந்தைக்கு 99 வயது. பழம்பெரும் இசை அமைப்பாளரான அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட மலையாள நடிகர்களோ, இயக்குனர்களோ ஒருவர்கூட வரவில்லை. இது எங்கள் குடும்பத்தினருக்கு மிகுந்த வருத்தம் அளித்திருக்கிறது.
இதுபோன்ற அவமரியாதை என் தந்தைக்கு ஏற்பட்டிருக்கக்கூடாது. இது மன்னிக்க முடியாத போக்கு. மாநில அரசு அவரது உடலுக்கு இறுதி மரியாதை அளித்தது. ஏராளமான அரசியல்வாதிகள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அந்த உணர்வு திரையுலகினரிடம் இல்லாமல்போனது ஏன் என்று தெரியவில்லை. - tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக