செவ்வாய், 22 அக்டோபர், 2013

கலகக்குரல்:தி இந்து எந்தக் கேவலமான எல்லைக்கும் செல்லத் தயங்காது!

தினமலர்,தினமணி வரிசையில் 'தி இந்து'...!

வுண்ட் ரோடு மகா விஷ்ணு ஹிந்து ஆங்கில பத்திரிகை குழுமத்தில் இருந்து இன்று முதல் (16-09-2013) 'தி இந்து' வெளிவந்திருக்கிறது.44 பக்கங்கள் 4 ரூபாய்.

அதன் ஆங்கிலப் பெயரில் இருந்து,ஜூனியர் விகடன்,ஆனந்த விகடனின் நகலாக இருப்பது வரை விமர்சிக்க எண்ணற்ற செய்திகள் இருக்கிற‌து.
சிறு விமர்சனம் மட்டும் இன்று செய்கிறோம்.

முதல் பக்கத்தில் அதி முக்கியத்துவத்துடன்  வெளிவந்த செய்தி இது தான்.

தமிழக சிறைகளில் அடிக்கடி தேடுதல் வேட்டை நடத்தப்படுவதோ கைதிகளிடமிருந்து செல்போன்,சிம்கார்டுகள் முதலானவை பறிமுதல் செய்யப்படுவதோ புதிதல்ல.எத்தனையோ முறை நடந்திருக்கிற‌து.நாளிதழ்களிலும் அது உரிய முறையில் அதற்கான செய்தி முக்கியத்துவத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.< ஆனால் இன்று 'தி இந்து' நாளிதழிலும் அப்படியான ஒரு செய்தி புகைப்படங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.ஆனால் செய்தி என்பதைத் தாண்டி அதி முக்கியத்துவத்துடன் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்திக்கு அருகில் இரண்டாவது தலைப்புச் செய்தி
என்று கருதும் வண்ணம் வெளியிடப்பட்டிருக்கிறது.
சிறைத்துறை குறித்த ஒரு செய்தியை,44 பக்கங்களில் ஏதோ ஒரு பக்கத்தில் வெளியிட வேண்டிய அளவுக்கு செய்திக்கான த்குதி உள்ள ஒன்றை முதல் பக்கத்தில் தலைப்புச் செய்திக்கு நிகராக வெளியிட வேண்டிய அவசியம் என்ன..?  முருகன் தொடர்புடைய செய்தி என்பதாலும்,கோவை சிறையில் இருக்கும் இஸ்லாமியர் தொடர்புடைய செய்தி என்பதாலும் 'தி இந்து' நாளிதழின் ஆசிரியர் இலாகா  இச்செய்தியை வெளியிட்டுத் தன் வன்மத்தையும் அரசியல் நிலைப்பாட்டையும் தெளிவாக உலகுக்கு வெளிப்படுத்தி இருக்கிறது. 'தி இந்து' நிருபர் வ.செந்தில்குமார் இதனை ரிப்போர்ட் செய்திருக்கிறார். இன்னும் ஆராய்ந்தால் கீழ்க்கண்ட விஷயம் கூட நிருபருக்குக் கிடைத்திருக்கலாம். காஞ்சி சங்கரராமனை வரதராஜப்பெருமாள் கோவிலின் உள்ளேயே >கொலை செய்த குற்றத்திற்காக அப்புவும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது,சிறையில் இருந்த படியே,அந்தக் கொலையில் நெம்பர் 1 அக்யூஸ்டான சுப்பிரமணி (ஜெயேந்திரன்) உடன் அதிக நேரம் செல்போனில் பேசினார்களா ?
அல்லது ரெண்டாவது அக்யூஸ்டான விஜயேந்திரனிடம் அதிக நேரம் பேசினார்களா என்பதுவும் அல்லது நெம்பர் ஒன் அக்யூஸ்ட்டை சகல மரியாதைகளுடன காரில் அழைத்து வந்த ஊடக முதலாளியுடன் அதிக நேரம் பேசினார்களா..?போன்ற விபரங்கள் கிடைத்திருக்கும். அல்லது தெரிந்திருந்தும் நிருபர் தன் வேலையைக் காப்பாற்றும் பொருட்டு எழுதாமல் விட்டு விட்டார் என்று கருத வேண்டியிருக்கிற‌து.அல்லது 'ரத்த' பாசத்தால் தி இந்து அதனை வெளியிடாமல் தவிர்த்திருக்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம்.< தினமலர்,தினமணி,தி இந்து போன்றவைகள்  ஒவ்வொன்றும் இனிமேல் போட்டி போட்டுக் கொண்டு விற்பனையைப் பெருக்குவதற்காக எந்தக் கேவலமான எல்லைக்கும் செல்லத் தயங்காது என்பதும் தெரிகிறது.கலகக்குரல்  kalakakkural.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக