ஞாயிறு, 27 அக்டோபர், 2013

நடிகை அர்ச்சனா சின்ன திரைக்கு வருகிறார் ! சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் சீரியல்



பாலுமகேந்திராவின் வீடு , நீங்கள் கேட்டவை உள்பட பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை அர்ச்சனா. தமிழில் வீடு, தெலுங்கில் தாசி ஆகிய இரு படங்களுக்காகவும்  சிறந்த நடிகைக்கான 2தேசிய விருதுகளை பெற்று உள்ளார்.  தங்கர் பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு, தனுஷின்  பரட்டை என்கிற அழகு சுந்தரம் என்ர படங்களில் அவர் கடைசியாக நடித்து இருந்தார். மிகவும் எளிமையாக காட்சி அளிக்கும் அர்ச்சனா  குச்சிப்புடி, கதகளி நடனங்களில் தேர்ச்சி பெற்றவர்.
கடந்த 5 வருடங்களாக நடிக்காமல் இருந்த நடிகை அர்ச்சனா சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். இந்த முறை அவர் நடிப்பது பெரிய திரையில் அல்ல சின்ன திரையில்.
ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, பாஷா படங்களை  இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் சின்னத்திரை தொடர்களில் அவர் நடிக்கிறார்.
தொடரின் பெயர் உணர்ச்சிகள். இந்த தொடருக்கு இசை அமைப்பவர்  பிரபல இசை அமைப்பாளர் தேவா ஆகும்.  தொடர் குறித்து இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூறும் போது இது  மிகவும் வித்தியாசமான தொடராக இருக்கும் இது மனித உணர்வுகளை விளக்கும் தொடராக அமையும் என்று கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக