புதன், 30 அக்டோபர், 2013

ஒபாமா நிர்வாகம் தீபாவளியை இனி கொண்டாடுமாம் ! வால்மார்ட்டின் விற்பனைக்கு மேலும் ஒரு பண்டிகை !

This year, 2013, many Members of Congress will celebrate Diwali in the United States Capitol for the first time," the resolution said noting that Diwali, a festival of great significance to Indian Americans, is celebrated annually by Hindus, Sikhs, Jains, and others throughout the US.
"Diwali is a festival of great significance to millions of Indians and Indian-Americans and I'm thrilled and proud to be a part of the first-ever Congressional Diwali," Congressman Crowley told PTI.
அடப்பாவிகளா ஏற்கனவே கனடா போன்ற நாடுகளில் வால்மார்ட் சியர்ஸ் போன்ற காபரெட் கடைகள் எல்லாம் தீபாவளி வியாபாரம் படு ஜோராக ஆரம்பித்து விட்டனர், நம்ப கவலை எல்லாம் இந்த BJP அரசியல் வாதிகளை பாத்தீகளா அமெரிக்காவே இந்துமத பெருமையை கொண்டாடுகிறது என்று தேர்தல் மேடைகளில் சொல்லபோகிறார்கள் அதையும் சில டுபாக்கூர்கள் நம்ப போகின்றன வாழ்க Walmart !
வாஷிங்டன்:அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் தீபாவளியை கொண்டாட இதையொட்டி இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று நாடாளுமன்ற கட்டிடம் வண்ண வண்ண சரவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளியூட்டப்பட வேண்டும். மேலும் அன்றைய தினம் நடைபெறும் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான ஆளும் கட்சி, எதிர்கட்சி எம்பிக்கள், செனட் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது இதுதான் முதல் முறை.
நாடாளுமன்றத்தில் முதல் முறையாக எம்.பி.க்கள் 2 பேர் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.அமெரிக்காவில் ஆளும் கட்சி எம்பிக்கள் 2 பேர், நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தனர்.
ஆளும் கட்சி எம்பிக்களான ஜோ கிரவுளி, பீட்டர் ரோஸ்காம் ஆகியோர் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர். அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் இந்த தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். யாருக்கு முக்கியத்துவம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் உள்ளிட்டோர் ஒவ்வொரு ஆண்டும் விசேஷமாக கொண்டாடி வரும் பண்டிகை தீபாவளி திருநாளாகும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக