திங்கள், 28 அக்டோபர், 2013

முஷரப் முன்பு எப்படி நவாஸ் ஷெரிப்பை கவிழ்த்து ஆட்சியை பிடித்தார் ? விபரம் வெளியாகியது

பாகிஸ்தானில் கடந்த 1999–ம் ஆண்டு நவாஸ் செரீப் பிரதமராக வந்த போது பர்வேஸ் முஷ்ரப் ராணுவ தலைமை தளபதி ஆக இருந்தார். அப்போது
அக்டோபர் 12–ந் தேதி ராணுவ புரட்சி மூலம் நவாஸ் செரீப் ஆட்சியை கவிழ்த்து முஷ்ரப் அதிகாரத்தை கைப்பற்றி சர்வதிகாரி ஆனார்.
பின்னர் தன்னை பாகிஸ்தானின் அதிபராக அறிவித்து கொண்டார். நவாஸ் செரீப் ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவ புரட்சி நடத்த முஷ்ரப் முன்கூட்டியே திட்டமிட்டு இருந்தார்.
அதை ராணுவ முன்னாள் தளபதி ஷாகித் அஷீஷ் தற்போது அம்பலபடுத்தியுள்ளார். இவர் எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியானது. அதில், இந்த தகவலை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

ராணுவ புரட்சியை ஏற்படுத்த தனக்கு மிகவும் விசுவாசமான 111 பிரிகேடியர்களை நியமித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அதை தொடர்ந்து இலங்கை சென்ற முஷ்ரப் ராணுவ புரட்சி நடத்தி நவாஸ் செரீப்பிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்ற தளபதிகள் மெகமூத் கான் மற்றும் ஷாகித் அஷீஷ் ஆகியோருக்கு மறைமுகமாக அதிகாரம் வழங்கினார்.
அதை தொடர்ந்து இவர்கள் கூட்டாக சேர்ந்து பிரதமர் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை கைப்பற்றி ஆட்சியை கவிழ்த்தனர். அதன்பின்னர் நாடு திரும்பிய முஷ்ரப் அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தார்.மேற்கண்ட தகவல்களை தனது புத்தகத்தில் தளபதி ஷாகித் அஷீஷ் தெரிவித்துள்ளார். maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக