வியாழன், 31 அக்டோபர், 2013

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமனம்!

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வுபெற்றதை தொடர்ந்து, புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்நிலையில், இவ்வழக்கை இனிமேல் ஜான் மைக்கேல் குன்ஹா விசாரிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக