திங்கள், 7 அக்டோபர், 2013

மலாலாவை மீண்டும் தாக்குவோம் ! தாலிபான்கள் மிரட்டல் !


பாகிஸ்தானின் சுவாட் பள்ளத்தாக்கில் இருக்கும் பெண்கள் கல்வி கற்பதை
அங்கிருந்த தலிபான்கள் தடுத்து வந்தனர். 2009ஆம் ஆண்டு முதல் இவர்கள் விதித்து வந்த கட்டுப்பாடுகளை எதிர்த்த மலாலா யூசுப்சாய் என்ற 15 வயது சிறுமி பெண்கள் கல்விக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். இந்நிலையில், கடந்த வருடம் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த இவர் தலிபான் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார். இந்தத் தாக்குதலில் உயிர் தப்பிய அவருக்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மலாலா யூசுப்சாய் உடல்நலம் பெற்றவுடன் பெண்கள் கல்விக்காக மீண்டும் குரல் கொடுத்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா கூட்டமைப்பு மாநாட்டிலும் இவர் உரையாற்றினார். “தலிபான்களின் துப்பாக்கி குண்டுகள் என்னை அமைதிப்படுத்தும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த அமைதியிலிருந்து ஆயிரக்கணக்கான குரல்கள் வெளிவந்துள்ளன. தலிபான்களின் செயல்கள் பாகிஸ்தானில் எதிர்ப்பையும், உலக நாடுகளிலிருந்து கண்டனத்தையும் வெளிப்படுத்தின. கொலை செய்வதும், மக்களைத் துன்புறுத்துவதும், சித்திரவதைக்கு உள்ளாக்குவதும் இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ள மலாலா, தலிபான்கள் இஸ்லாம் என்ற வார்த்தையைத் தவறாகப் பயன்படுத்துகிறது” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
ஆனால், வாய்ப்புக் கிடைத்தால் மலாலா மீண்டும் தாக்கப்படுவார் என்று தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஷாகிதுல்லா சாஹித் இன்று தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. பெண் கல்விக்குக் குரல் கொடுத்ததற்காக மலாலா தாக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள சாஹித், தலிபான்களை எதிர்த்து பிரச்சாரம் செய்ததற்காகவே அவர் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார் malaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக